Saturday, April 7, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - சேறு செய்யும் கண்ணீர்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - சேறு செய்யும் கண்ணீர்


கண்ணீர்.
உணர்சிகளின் வடிகால்.
அன்புக்கும், காதலுக்கும், பிரிவுக்கும், துன்பத்திற்கும், சந்தோஷத்திற்கும் அது தான் வடிகால்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும்
அன்பை அடைத்து வைக்க முடியுமா ? அப்படி அன்பு கொண்டவர்களின் கண்ணீர் பூஜைக்கு உகந்தது என்கிறார் வள்ளுவர்.
இறைவனை நினைத்து காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி அந்த கண்ணீர் ஆறாக ஓடி திருவரங்கத்தின் கோயில் பிரகாரத்தில் உள்ள மண்ணை சேறு ஆக மாற்றி விடுமாம். அந்த சேறு என் நெற்றியில் இட்டுக்கொள்ளும் அணிகலன் என்கிறார் குல சேகர ஆழ்வார்.



------------------------------------------------------------------------------------------------------------------------
ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய்
மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம்
சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதம் பிரித்த பின்

----------------------------------------------------------------------------------------------------------------------
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி இராமனாய்
மார் அடர்த்ததும் மண் அளந்ததும் சொல்லிப் பாடி வண் பொன்னிப்
பேராறு போல் வரும் கண்ண நீர் கொண்ட ரங்கன் கோயில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழுஞ் சேறு என் சென்னிக் கணிவனே
-------------------------------------------------------------------------------------------------------------------
பொருள்
ஏறு அடர்த்ததும் = ஏறு = எருது. நப்பினையயை மணந்து கொள்ள வேண்டி ஏழு எருதுகளை அடக்கியதும்
ஏனமாய் = பன்றி உருவமாய்
நிலம் கீண்டதும் = நிலத்தை கிண்டியதும்
முன்னி = முன்பு
இராமனாய் = இராமானாய்
மார் அடர்த்ததும் = மாறு பட்டவர்களை (அரக்கர்களை) சண்டை இட்டதும்
மண் அளந்ததும் = வாமன அவதாரத்தில் மூன்று உலகங்களை அளந்ததும்
சொல்லிப் = சொல்லி, பேசி
பாடி = பாடலாக பாடி
வண் பொன்னிப் = சிறந்த பொன்னி
பேராறு போல் = பெரிய ஆறு போல
வரும் கண்ண நீர் = வரும் கண்ணீர்
கொண்ட = வழிந்து ஓடும்
ரங்கன் கோயில் திரு முற்றம் = திரு அரங்கன் கோயில் திரு முற்றம்
சேறு செய் = அந்த கண்ணீரால் சேறு செய்யும்
தொண்டர் சேவடி செழுஞ் சேறு = அவர்களின் சேவை செய்யும் செம்மையான சேறு
என் சென்னிக் கணிவனே = என் தலையில் அணிவேனே


1 comment:

  1. Nice one. You seem to have omitted to consider the word "adi" in the last line. "The tears are flowing from the bhaktas, making it muddy in the temple. Their feet are wet with such mud. And such mud is a jewel for my head." No big difference, but I liked to think about the bhaktas walking in the mud and the Azhwar taking that mud and putting it on his forehead!

    ReplyDelete