Monday, April 16, 2012

திரு வாசகம் - ஒரு முன்னோட்டம்


திரு வாசகம் - ஒரு முன்னோட்டம் 


தன் பெருமை அறியா ஊர்கள் பல உண்டு.

அதில் ஒன்று மதுரைக்கும் மேலுருக்கும் இடையில் உள்ள திருவாதவூர்.

மாணிக்க வாசகர் அவதரித்த தலம்.

ஊரின் நடுவே ஒரு பேருந்து நிலையம். அதை சுற்றி சில பொட்டி கடைகள்.

சற்று தள்ளி மாணிக்க வாசகர் பிறந்த இல்லம் இருக்கிறது. மிக மிக சிறிய வீடு. மின்சார விளக்கு இல்லை. உள்ளே ஒரு தீபம் மினுங்கி கொண்டு இருந்தது.

எவ்வளவு பெரிய மகான். அவர் பிறந்த வீட்டிற்கு செல்லும் வழி கூட நன்றாக இல்லை. மனசுக்கு என்னவோ போல் இருந்தது.


அங்கிருத்து சிறிது தூரத்தில் திரு வாதவூர் சிவன் கோயில். மாணிக்க வாசகர், அரசன் குதிரை வாங்க தந்த பணத்தில் கட்டியது.

இந்த கோயில் வாசலில் தான் சிவன் தனக்கு அந்தணனாக காட்சி தந்து ஆண்டு கொண்டதாய் மணிவாசகர் பாடி இருக்கிறார்.

ரொம்ப சிறிது அல்ல. ரொம்ப பெரிதும் அல்ல. கூட்டமே இல்லை. அமைதியான கோயில். அங்கங்கே மின் விளக்குகள்.

ஒலி பெருக்கியில் திருவாசகம் ஓடிக் கொண்டு இருந்தது.

பிரகாரத்தில் பவள மல்லி மரங்கள். அங்குள்ள கிணற்றில் யாரோ தண்ணீர் மொள்ளும் ஓசை.

மணி வாசகர் - திருவாசகம், திருக் கோவையார் என்ற இரண்டு நூல்கள் எழுதி உள்ளார். இரண்டும் சேர்ந்து எட்டாம் திரு முறை என்று அழைக்கப் படுகிறது. மொத்தம் பன்னிரண்டு திருமுறைகள்.

7 ஆம் நூற்றாண்டில் இருந்து 10 ஆம் நூற்றாண்டு வரை அவர் காலம் பற்றி அபிப்ராயங்கள் நிலவுகிறது.

கனடாவில் பிறந்த G U போப் தமிழ் மேல் ஆர்வம் கொண்டு, தமிழ் படித்து அதிலும் திருவாசகத்தின் மேல் காதல் கொண்டு அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த நாம் அது பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே ?  

5 comments:

  1. நான் திருவாதவூர் போய் இருக்கிரேன். மிக நல்ல இடம். அமைதியான கோவில்.

    இன்னும் எழூதவும்.

    ReplyDelete
  2. can you start with குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமின் சிரிப்பும் .....

    ReplyDelete
    Replies
    1. சிவபெருமான் திருபெருந்துறையில் தானே மணிவாசகரை ஆட்கொண்டார்? ஒளிசெய் மானுடனாகி நோக்கினும் பட்ட கீழ்மையே .......

      Delete
  3. மாணிக்க வாசகரை, சிவபெருமான் காட்ச்சி கொடுத்தது, ஆவுடையார் கோவில் என்று இப்போது அழைக்கபடும் கோவில், திருவாசகத்தில் குறிப்பிடும் திருப்பெருந்துறை ஆகும்.

    ReplyDelete