Monday, April 16, 2012

இராமாயணம் - காப்பியத்தின் போக்கை மாற்றிய வரம்


இராமாயணம் - காப்பியத்தின் போக்கை மாற்றிய வரம் 


கடவுள்கள் வரம் கொடுத்து பட்ட பாடு நிறைய உண்டு.

இராமாயணத்திலும் நிறைய இடங்களில் வரங்கள் வருகிறது.

சுவாரசியமான வரங்கள், கதைக்கு சுவை கூட்டுவன, சில புதிய திருப்பங்களை கொண்டு வருவன...

அதில் முதலில் வருவது கைகேயி கேட்ட இரண்டு வரங்கள்...


------------------------------------------------------
ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது, சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது, எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவினும் சிறந்த தீயாள்.
------------------------------------------------------

ஏய வரங்கள் = நீ தந்த வரங்கள்
இரண்டின் ஒன்றினால் = இரண்டு வாரங்களில் ஒன்றால்
என் சேய் அரசு ஆள்வது: = என் மகன் அரசு ஆள வேண்டும்.
சீதை கேள்வன் = இராமன் என்று சொல்லவில்லை, கௌசலையின் மகன் என்று சொல்லவில்லை, தசரத குமாரன் என்று சொல்லவில்லை...சீதையின் கணவன் என்று அவனை யாரோ நேத்து வந்த ஒரு பெண்ணின் கணவன் என்று தள்ளி வைத்து பேசுகிறாள்.
ஒன்றால் = மற்ற ஒரு வரத்தால்

போய் வனம் ஆள்வது = காட்டுக்குப் போவது
எனப் புகன்று நின்றாள் = என்று சொன்னாள். சொன்னது யாரு ?

தீயவை யாவினும் சிறந்த தீயாள்.
= தீயவை எல்லாவற்றையும் விட தீயவள் (நோய், நஞ்சு, பகை, வறுமை போன்ற தீயவைகளுக்கு எல்லாம் பெரிய தீயவள்).

சொல்லி விட்டு போகவில்லை. புகன்று நின்றாள்.

கைகேயி ஏன் இந்த வரங்களை கேட்டாள்? அவள் அப்படி பட்டவள் இல்லையே. பின் எது அவள் மனத்தை மாற்றியது ?

அதை பின் ஒரு Blog இல் பார்ப்போம்.


1 comment: