Monday, April 23, 2012

கம்ப இராமாயணம் - வலியைத் தாங்கலாம், வெட்கத்தை?


கம்ப இராமாயணம் - வலியைத் தாங்கலாம், வெட்கத்தை?


குழந்தைகள் கீழே விழுவதை பார்த்து இருக்கீர்களா ? விழுந்தவுடன் சுற்றும் முற்றும் பார்க்கும். யாரும் இல்லை என்றால் பேசாமல் எழுந்து போய்விடும்.

யாரவது பார்த்து விட்டால், "ஓ" என்று அழ ஆரம்பிக்கும்.

வலியை தாங்கிக் கொள்ள முடியும்? வெட்கத்தை ?


இராவணன் தோற்று இலங்கை திரும்புகிறான். இராவணனின் சோகத்தை கம்பன் பிழிந்து வைக்கிறான்.

வான் நகும், மண்ணும் எல்லாம் நகும், நெடு வயிரத் தோளான்
நான் நகும் பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்க்கு நாணான்
வேல் நகு நெடுங்கண், செவ்வாய், மெல் இயல் மிதிலை வந்த
சானகி நகுவாள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்





வான் நகும் = வானில் உள்ள தேர்வர்கள் எல்லாம் சிரிப்பார்களே




மண்ணும் எல்லாம் நகும் = மண்ணில் உள்ள மனிதர்கள் 


எல்லாம் சிரிப்பார்களே (மனிதர்கள், அரக்கர்கள், வானரங்கள் மற்றும் எல்லோரும் )

நெடு வயிரத் தோளான் = நெடிய வைரம் போன்ற தோள்களை உடைய

நான் நகும் பகைஞர் எல்லாம் நகுவர் = நான் (இராவணனாகிய 
நான் ) பார்த்து சிரித்த பகைவர்கள் எல்லாரும் இப்போ என்னை
பார்த்து சிரிப்பார்களே

என்று = என்று

அதற்க்கு நாணான் = அதற்க்கு எல்லாம் வெட்கப் பட மாட்டான்

வேல் நகு = வேலைப் பார்த்து சிரிக்கும் (நீ எல்லாம் ஒரு
கூர்மையா, என் கண்ணைப் பார் என்று அதை பார்த்து எள்ளி நகையாடும் )

நெடுங்கண் = நீண்ட கண்களை கொண்ட

செவ்வாய் = சிவந்த இதழ்களை கொண்ட

மெல் இயல் = மென்மையான இயல்பை கொண்டவளான

மிதிலை வந்த = மிதிலையில் இருந்து வந்த

சானகி = சீதை

நகுவாள் = சிரிப்பாளே

என்றே = என்று

நாணத்தால் சாம்புகின்றான் = வெட்கத்தால் கருகி உள்ளே ஒன்றும் இல்லாமல் போகிறான் (சாம்புதல் = வெம்புதல், உள்ளீடு அற்றுப் போதல், பதர் போல் ஆகுதல் )

அவள் முன்னால் எப்படி போய் நிற்ப்பேன் என்று வெட்கப் படுகிறான்.

ஒரு பாக்கம் போரில் தோல்வி. இன்னொரு புறம் சீதை தன்னை இனிமேல் மதிக்க மாட்டேளே என்ற வருத்தம்...சோகம் ததும்பும் பாடல்...அந்த கதா பாத்திரத்தின் மன நிலையை அப்படியே படம்    பிடித்து கட்டுகிறான் கம்பன்.

3 comments:

  1. என்ன ஒரு பாடல் அய்யா இது! அந்த ஒரு கடினமான தருணத்திலும் அவனுக்கு சீதை பற்றித்தான் எண்ணம்!

    கம்பர் சும்மா பிளந்து கட்டி விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. சீதையின் அழகுக்கு இது ஒரு சான்று. அந்த அழகுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் தாங்கலாம்

      Delete
  2. //அதற்க்கு நாணான் = அதற்க்கு எல்லாம் வெட்கப் பட மாட்டான்//

    ற்க்கு எனவந்திருப்பதை திருத்திவிடுங்கள்.

    //ஒரு பாக்கம் போரில் தோல்வி.//

    இது பக்கம்?

    ReplyDelete