Saturday, April 28, 2012

கம்ப இராமாயணம் - இராமனுக்கு எத்தனை உயிர் ?

கம்ப இராமாயணம் - இராமனுக்கு எத்தனை உயிர் ?


சீதையை பிரிந்து இராமன் இருக்கிறான். உடலும், உள்ளமும் சோர்ந்து போய் இருக்கிறான். அப்படி சோர்ந்து போன சமயம்,

இராமனைப் பார்த்தால் ஏதோ உயிர் இல்லாதாவன் மாதிரி தோன்றுகிறது.

அத்தனை அயர்ச்சி. சுக்ரீவன் இராமனை தேற்றுகிறான்.

கொஞ்சம் தேறுதல் அடைகிறான். உயிர் வந்த மாதிரி இருக்கிறது. சற்று நேரம் கழித்து மீண்டும் சோர்வு...ஏதோ இராமன் ஒவ்வொருமுறையும் உயிர் இழந்து மீண்டும் பெற்றது மாதிரி தோன்றுகிறது...

எத்தனை முறை தான் அவனுக்கு உயிர் போய் வருமோ ?





கார் வரை இருந்தனன் கதிரின் காதலன்,
சீரிய சொற்களால் தெருட்ட, செங் கணான்
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா,
சோர்தொறும் சோர்தொறும், உயிர்த்துத் தோன்றினான்.


கார் = கரிய மேகங்கள் (கார் மேகம்)

வரை = மலை

இருந்தனன் = இருந்தவன். யாரு ?

கதிரின் காதலன், = சூரியனின் காதலன் (மகன் சுக்ரீவன்)

சீரிய சொற்களால் = உயர்ந்த சொற்களால்

தெருட்ட = தேறுதல் சொல்ல

செங் கணான் = சிவந்த கண்களை கொண்ட (உறங்காமல் விழிதிருந்ததால் சிவந்திருக்குமோ?) இராமன்

ஆர் உயிர் = அருமையான உயிர்

ஆயிரம் உடையன் ஆம் எனா = ஆயிரம் உடையான் என்று

சோர்தொறும் சோர்தொறும் = சோர்ந்து போகும் தோறும்

,உயிர்த்துத் தோன்றினான். = உயிர் பெற்று மீண்டும் தோன்றினான்


3 comments:

  1. ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா,
    சோர்தொறும் சோர்தொறும், உயிர்த்துத் தோன்றினான்.

    இந்த இரண்டு வரிகளும் அருமை!

    ஆனால் "கதிரின் காதலன்" என்பது யார்? ஏன் "மகன் சுக்ரீவன்" என்று எழுதி இருக்கிறாய்?

    ReplyDelete
    Replies
    1. ஏன் என்றால் சுக்ரீவன், சூரியனின் மகன்

      Delete
  2. நன்றி. அது எனக்குத் தெரியாமல் இருந்தது.

    ReplyDelete