Tuesday, May 1, 2012

கம்ப இராமாயணம் - சூர்பனகையின் நளினம்


கம்ப இராமாயணம் - சூர்பனகையின் நளினம்

சூர்பனகை ரொம்ப நளினமானவள்.

இரண்டு பெரிய யானையை பிடித்து, அதன் தும்பிக்கைகளை ஒண்ணோட ஒண்ணா கட்டி முடிச்சு போட்டு, அதை இரண்டையும் அப்படியே தூக்கி கழுத்துல மாலையா போட்டுக்கொண்டு நடக்கிறாள். 

அப்படி நடக்கும் போது அவள் இடை அங்கும் இங்கும் அசைகிறது. அவள் சிரத்தால் இடியும் அஞ்சும் ...எவ்வளவு நளினம்....மேல படியுங்கள்...



கடம் கலுழ் தடங் களிறு கையொடு கை தெற்றா.
வடம் கொள. நுடங்கும் இடையாள். மறுகி வானோர்
இடங்களும். நெடுந் திசையும். ஏழ் உலகும். யாவும்.
அடங்கலும் நடுங்க. உரும் அஞ்ச  நனி ஆர்த்தாள்

கடம் கலுழ் = மதம் பிடிக்கும்

தடங் களிறு = பெரிய யானைகளை

கையொடு கை = இரண்டு தும்பிக்கைகளையும்

தெற்றா வடம் கொள. = வடம் போல கட்டி

நுடங்கும் இடையாள் = (கழுத்தில் அணிந்து கொண்டதால்,) அசையும் இடையையை கொண்டவள்

மறுகி = வருந்தும் படி

வானோர் இடங்களும். = வானோர் வாழும் தேவலோகமும்


நெடுந் திசையும். = நீண்ட திசைகளும்

ஏழ் உலகும் = ஏழு உலகங்களும்

யாவும். = எல்லா உயிரும்

அடங்கலும் = அடங்கும் படியும்

நடுங்க. = நடுங்கவும்

உரும் அஞ்ச = இடியும் அஞ்சும் படி

நனி ஆர்த்தாள் = ரொம்ப பெரிய ஆர்ப்பாட்டம் செய்தாள் (சால, உறு, தவ, நனி, கூர், கழி என்பன மிகுதி என்ற பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல்)



1 comment: