Monday, May 28, 2012

திரு மந்திரம் - எப்படி இறைவனை அறிவது?


திரு மந்திரம் - எப்படி இறைவனை அறிவது?


இறைவன் உண்டா ? உண்டு என்றால் அவனை எப்படி அறிவது ?

மனிதன் சிந்திக்க தொடங்கிய காலம் தொட்டு இந்த கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

புத்தகங்களை படித்து அவனை அறிந்து கொள்ள முடியுமா ?

அறிந்தவர்களை கேட்டால் சொல்லுவார்களா ?

அவர்களை எப்படிநம்புவது ?

நிறைய குழப்பம் இருக்கிறது.

திருமூலர் ஒரு வழி சொல்கிறார்.


இறைவனை முதலில் ஒருவர் அறிகிரா்...அவருடைய சொந்த முயற்ச்சியில்.

அறிந்த பின் அவர் அதை மற்றவர்களுக்குச் சொல்கிறார்.

சொல்வதை கேளுங்கள். சும்மா கேட்டால் மட்டும் போதாது, அதை அனுபவ பூர்வமாக உணருங்கள்.

உணர்ந்த பின், நீங்கள் அதை அப்படியே நம்பாதீர்கள். நீங்க போய் திரும்பவும் படியுங்கள்.

அப்படி படித்து, உணர்ந்த பின், நீங்கள் உயர்ந்த நிலை அடைவீர்கள் என்கிறார்.





தேவர் பிரான்தனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே.


தேவர் பிரான்தனைத் = தேவர்களை விட்டு எப்போதும் பிரியாதவனை

திவ்விய மூர்த்தியை = திவ்ய மூர்த்தியை

யாவர் ஒருவர் = யார் ஒருவர்

அறிவார் = அறிவாரோ

அறிந்தபின் = அப்படி அறிந்த பின், அவர்

ஓதுமின் = மற்றவர்களுக்கு சொல்லுங்கள்

கேள்மின் = அப்படி சொல்வதை கேளுங்கள்

உணர்மின் = கேட்டதை உணருங்கள்

உணர்ந்தபின் = உணர்ந்த பின்

ஓதி = படியுங்கள் (வெறும் பக்தி உணர்வு மட்டும் போதாது, ஞானமும் வேண்டும்)

உணர்ந்தவர் = உணர்ந்த பின் (அறிவாலும், மனத்தாலும் அறிந்த பின்)

ஓங்கிநின் றாரே = நீங்கள் சிறந்து விளங்குவீர்கள்


முதலில் படிக்கச் சொல்லவில்லை. அறிந்தவர் சொல்வதை கேட்கச் சொல்கிறார்.


மத்தவங்க சொன்னாங்க என்பதற்காக எதையும் நம்பாதீங்க. ஓதி உணருங்கள் என்கிறார் திருமூலர்.


(Appeal: If you like this blog, please click g+1 button below to express your liking)



2 comments:

  1. very true.Anything for that matter.

    ReplyDelete
  2. இந்த மாதிரி விளக்கமெல்லாம், முதலில் இறைவன் உண்டு என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறது. அதையே கேள்வி கேட்க ஆரம்பித்தால், பின் இந்த விளக்கம் போதாது.

    ReplyDelete