Thursday, May 24, 2012

திருக்குறள் - பிரிவிலும் ஒரு சுகம்


திருக்குறள் - பிரிவிலும் ஒரு சுகம்


ராட்சசி, என்னமா அழகா இருக்கா....

அப்படியே கடிச்சு சாபிடுரலாம் போல இருக்கு.

கோவிச்சு இருக்கும் போது கூட அழகாதான் இருக்கா ...

அது கூட உண்மையான கோவம் இல்ல..சும்மா ஒரு பாவலா..

என்ன தான் பண்ணுறானு பாப்போம்.

எவ்வளவு சமாதானம் பண்ணாலும் ரொம்ப தான் பிகு பண்ணிக்கிறா...

அவளுக்கும் தெரியும் தப்பு என் மேல இல்லன்னு..

இருந்தாலும் ஒரு முரட்டு பிடிவாதம் ..

sorry சொல்லியாச்சு , இனிமேல் இப்படி ஆகாதுன்னு promise பண்ணியாச்சு ..

ஒண்ணுக்கும் மசிய மாட்டேனு அடம் பிடிக்கிறாள் ..

ஆனது ஆகட்டும்னு போய் பேசிரலாமா?...

வேணாம் அப்புறம் இன்னும் கோவிப்பா ... ம்ம்ம்ம் ... என்ன பண்ணலாம் ?

அட இதுல கூட ஒரு கிக் இருக்கத்தான் செய்யுது

காதலிய அணைப்பது மட்டும் இல்லை, ஊடலில் அவளை விட்டு பிரிந்து இருப்பது கூட ஒரு சுகம் தான்....

அப்படின்னு , வள்ளுவர் சொல்லுறாரு

தவறிலர் ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கொன்று உடைத்து


தவறிலர் ஆயினும் = தன் மேல் தவறு இல்லா விட்டாலும்

தாம் வீழ்வார் = தன் காதலியின்

மென் தோள் = மென்மையான தோள்களை

அகறலின் = அகன்று இருப்பது, தள்ளி இருப்பதில்

ஆங்கொன்று உடைத்து = என்னோவோ ஒரு சுகம், kick , சந்தோஷம் இருக்கு.

வள்ளுவர் "ஏதோ ஒன்று இருக்கு " அப்படின்னு தான் சொல்லி இருக்காரு. அந்த ஒண்ணு என்னவா இருக்கும்.....?


(குறள் 1325 )

1 comment:

  1. வள்ளூவர் என்னவோ சொல்லி விட்டார். ஆனால் அனேகமாக எவரும் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்!

    ஆனால் அழகான குறள்.

    ReplyDelete