Wednesday, June 6, 2012

விவேக சிந்தாமணி - சொல்லக் கூடாதது


விவேக சிந்தாமணி - சொல்லக் கூடாதது 

எது எல்லாம் வெளியே சொல்லக் கூடாது என்று விவேக சிந்தாமணி பட்டியல் தருகிறது.

குரு உபதேசம் மாதர்கூடிய இன்பம் தன்பால் 
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம் 
அரிய மந்திரம் விசாரம் ஆண்மை இங்கிவைகள் எல்லாம் 
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே.


குரு உபதேசம் = குரு தந்த உபதேசம்
மாதர்கூடிய இன்பம் = மனைவியிடம் பெற்ற இன்பம்
தன்பால்மருவிய நியாயம் = அனுபவத்தில் நமக்கு தோன்றிய நியாயம்
கல்வி = கல்வி
வயது = வயது
தான் செய்த தர்மம் = தான் செய்த தர்மம்
அரிய மந்திரம் = கிடைக்காமல் கிடைத்த மந்திரம்
விசாரம் = ஆராய்ச்சி
ஆண்மை = ஆண்மை (!)
இங்கிவைகள் எல்லாம் = இவற்றை எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது = யார்கிட்டையும் சொல்லக் கூடாது
உரைத்திடில் = அதையும் மீறி சொன்னால்
அழிந்து போமே. = அவற்றால் பலன் இல்லாமல் போகும்

கல்வியும், வயதையும் சொன்னால் என்ன தப்பு என்று தெரியவில்லை


2 comments:

  1. "Kalvi" because you should not boast.

    "Age" because you don't want to be seen to be soliciting?

    "Manlihood" because it would seem like being aggressive and lead to fights?

    ReplyDelete
  2. Exactly, why kalvi, people always say to share the knowledge acquired by a person.
    Revathi.

    ReplyDelete