Saturday, June 9, 2012

அபிராமி அந்தாதி - அபிராமி போகாத இடம்


அபிராமி அந்தாதி - அபிராமி போகாத இடம்


பக்தி இலக்கியத்தில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது அபிராமி அந்தாதி.

இதை படிக்கும் போது எனக்கு அபிராமி ஒரு அம்மனாக தோன்றவில்லை. ஒரு தாயாக, சகோதரியாக, தோழியாக, எனக்குத் தோன்றுகிறது.

ரொம்பவும் அன்யோன்யமான பாடல்கள்.

"தொட்டு அணைத்து உன் தாமரை போன்ற அடியை தன் தலையில் வைத்துகொண்ட சிவனின் கையில் இருந்த தீயும், தலையில் இருந்த ஆறும் எங்கே? உண்மையான மனம் இல்லாதவர்களை தவிர மற்றவர்களின் மனத்தில் ஒரு போதும் செல்லாத பூங்குயிலே"


தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே


தை வந்து = தொட்டு, தடவி
நின்= உன்னுடைய
அடித் தாமரை = தாமரை போன்ற திருவடிகளை
சூடிய = தலையில் சூடிக்கொண்ட
சங்கரற்கு = சிவனுக்கு
கை வந்த தீயும் = கையில் இருந்த தீயும்
தலை வந்த ஆறும் = தலையில் இருந்த ஆறும்
கரந்ததெங்கே = மறைந்ததெங்கே ?
மெய் வந்த = உண்மை நிறைந்த
நெஞ்சின் அல்லால் = மனத்தை தவிர
ஒரு காலும் = ஒரு போதும்
விரகர் தங்கள் = விரகம் கொண்டவர்கள்
பொய் வந்த நெஞ்சில் = பொய் நிறைந்த நெஞ்சில்
புகல் அறியா = செல்லத் தெரியாத
மடப்பூங்குயிலே = பூங்குயிலே


3 comments:

  1. Why do you find these songs more "intimate" or "closer to heart" than others?

    ReplyDelete
    Replies
    1. எப்படி சொல்லுவேன் ?

      அபிராமியின் பாதத்தை சிவன் தலையில் வைத்ததா ?
      பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மட பூங் குயிலே என்ற அவளின் வெகுளித்தனத்தை சொல்லுவதா?

      தெரியவில்லை.

      பிடித்திருக்கிறது

      Delete
  2. ஒளியாக நின்று வழிகாட்டும் எந்தன் அருட்புனலே
    தெளிவான வாழ்க்கை திரளாக வரப் புரந்தவளே
    அளிவந்த போது இனங்கண்டு கொண்டேன்-நீ
    வெளிநின்ற போது உளமே மகிழ்ந்து நெகிழ்ந்தேன்

    அன்னை அபிராமியை வணங்கி அவள் அருள் பெறுவோம்.
    அன்பன் பொன்னுத்துரை

    ReplyDelete