Monday, June 18, 2012

ஆசாரக் கோவை - உடை உடுத்தும் முறை


ஆசாரக் கோவை - உடை உடுத்தும் முறை


உடை உடுத்தலை பற்றி ஆசாரக் கோவை சில வழி முறைகளை கூறுகிறது.

ஒரு ஆடை கூட உடுத்தாமல் நீராடக் கூடாது (இது பொது இடங்களில், ஆறு, குளம் போன்ற இடங்களை குறிக்கும் என்று நினைக்கிறேன்),

ஒரு ஆடை மட்டும் உடுத்து உணவு உண்ணக் கூடாது, குறைந்த பட்சம்

இரண்டு ஆடையாவது உடுத்தி இருக்க வேண்டும்,

உடுத்திய ஆடையை நீரினுள் பிழியக் கூடாது,

ஒரு ஆடை மட்டும் உடுத்து பொது சபையில் நுழையக் கூடாது





உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்
உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே
முந்தையோர் கண்ட முறை.

உடுத்தலால் = உடை உடுக்காமல்

நீராடார் = நீராட மாட்டார்கள்

ஒன்றுடுத் துண்ணார் = ஒன்று + உடுத்து+ உண்ணார் = ஒரே ஒரு ஆடை மட்டும் உடுத்து உணவு உண்ண மாட்டார்கள்

உடுத்தாடை = உடுத்த + ஆடை = உடுத்திய ஆடையை

நீருட் பிழியார் = நீரினுள் பிழிய மாட்டார்கள் (அந்த தண்ணி அழுக்காகுமா இல்லையா ?)

விழுத்தக்கார் = சிறப்பானவர்கள்

ஒன்றுடுத் தென்றும் = ஒன்று + உடுத்து + என்றும் = ஒரே ஒரு ஆடை மட்டும் உடுத்து என்றும்

அவைபுகா ரென்பதே = அவை புகார் என்பதே

முந்தையோர் கண்ட முறை. = நம் முன்னோர்கள் கண்ட முறை



No comments:

Post a Comment