Sunday, June 24, 2012

நல்வழி - எல்லோரும் போகும் வழி


நல்வழி - எல்லோரும் போகும் வழி


நல்வழி என்ற நூல் ஔவையாரால் எழுதப்பட்டது.

எல்லாம் விதி வழி நடக்கும். ரொம்ப அலட்டிகொள்ளாதீர்கள் என்ற ரீதியில் எழுதப்பட்ட நூல்.

வாழ்க்கையில் பிரச்சனைகளும் சங்கடங்களும் வரும்போது புரட்டி பார்க்க உகந்த நூல். மன ஆறுதல் தரும்.

எத்தனை வருடம் அழுது புரண்டாலும், இறந்தவர்கள் மீண்டும் வருவது இல்லை.

அது மட்டும் அல்ல, நாமும் ஒரு நாள் இந்த உலகை விட்டு சென்று விடுவோம்.

அதுவரை, பெரிதாக அலட்டி கொள்ளாமல், முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்து வாழுங்கள்.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.


ஆண்டாண்டு தோறும்= வருடக் கணக்கில்

அழுது புரண்டாலும் = அழுது புரண்டாலும்

மாண்டார் = இறந்தவர்கள்

வருவரோ = திரும்பி வருவார்களோ? (வர மாட்டார்கள்)

மாநிலத்தீர் = பெரிய உலகில் வாழும் மக்களே

வேண்டா = பெரிதாக ஒன்றும் வேண்டாம்

நமக்கும் அதுவழியே = நமக்கும் அதே கதி தான்.

நாம்போம் அளவும் = நாம் இந்த உலகை விட்டு செல்லும் நாள் வரை

எமக்கென்னென் றிட்டுண் டிரும் = பெரிய வார்த்தை. கொஞ்சம் சீர் பிரிக்கணும்.
எமக்கு + என்ன + என்று + இட்டு + உண்டு + இரும் = எது நடந்தால் நம்மக்கு என்ன என்று, பிறருக்கு நன்மை செய்து, நீங்களும் உண்டு சந்தோஷமாய் இருங்கள்.

கொஞ்சம் விரக்தியான பாடல் போல் இருக்கும். சிந்தித்துப் பார்த்தால், சரிஎன்று படலாம்

No comments:

Post a Comment