Monday, June 11, 2012

முத்தொள்ளாயிரம் - வரியா ? திருட்டா?


முத்தொள்ளாயிரம் - வரியா ? திருட்டா?

முத்தொள்ளாயிரத்தில் உள்ள பாடல்கள் எல்லாம் மிக மிக இனிமையான பாடல்கள்.

காதலை மிக அழகாக சொல்லும் பாடல்கள்.

இங்கே ஒரு பெண் தன் தோழியிடம் கூறுகிறாள்....

அரசன் என்பவன் தன் குடி மக்களிடம் ஆறில் ஒரு பங்கைத்தானே வரியாக வாங்க வேண்டும்...

ஆனால் இந்த மன்னனோ என் மனமும், என் நாணத்தையும், என் பெண் நலன்கள் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டானே..இது எந்த விதத்தில் தர்மம் என்று கேட்கிறாள்.


என்நெஞ்சும், நாணும், நலனும் இவையெல்லாம்
மன்னன் புனல்நாடன் வௌவினான் என்னே
அரவுஅகல் அல்குலாய் ஆறில்ஒன்று அன்றோ
புரவலர் கொள்ளும் பொருள்.


என்நெஞ்சும், = என் மனமும்

நாணும், = என்னுடைய நாணத்தையும்

நலனும் = என்னுடைய பெண் நலன்கள் (அச்சம், மடம், வெட்கம், வெகுளித்தனம்...)

இவையெல்லாம் = இவை எல்லாவற்றையும் 

மன்னன் = இந்த நாட்டின் மன்னவன்

புனல்நாடன் = நீர் நிலைகள் நிரம்பிய ஊர்க்காரன்

வௌவினான் = எடுத்துக் கொண்டான்

என்னே = என்ன இது

அரவு = பாம்பின் படம் போல்

அகல் = அகன்ற

அல்குலாய் = 

ஆறில்ஒன்று அன்றோ = ஆறில் ஒரு பாகம் தானே

புரவலர் = அரசர்கள்

கொள்ளும் பொருள். = எடுத்துக்கொள்ளும் பொருள் (வரி). இப்படி முழுசா 
எல்லாத்தையும் எடுத்துக்கொண்டால் எப்படி ?


3 comments:

  1. இது வரி அல்ல, திருட்டு! வாரி ஆறில் ஒரு பாகமாக இருக்கலாம். திருட்டு முழுவதும்தானே.

    ReplyDelete
  2. அல்குலாய் = small waist...mika mika siraiya idai..( courtesy: internet)

    ReplyDelete
    Replies
    1. அரவு = பாம்பின் படம் போல்

      அகல் = அகன்ற....?????

      Delete