Friday, June 15, 2012

கம்ப இராமாயணம் - இராமனின் பிரிவு சோகம்


கம்ப இராமாயணம் - இராமனின் பிரிவு சோகம்


சீதையையை பிரிந்து இராமன் தனித்து இருக்கிறான்.

மழைக் காலம்.

கானகம்.

தனிமை.

மனைவியை பிரிந்த சோகம்.

பிரிந்த சோகம் கூட இல்லை, மனைவி தொலைந்த சோகம்.

அந்த நேரத்தில் பெய்யும் மழையை கம்பன் சொல்கிறான்....

மலையின் மேல் விழும் மழை, மன்மதன், சீதியையை பிரிந்த இராமனின் மேல் விடும் மலர் அம்புகள் போல இருந்ததாம்...





இன் நகைச் சனகியைப் பிரிந்த ஏந்தல்மேல்,
மன்மதன் மலர்க் கணை வழங்கினான் என,
பொன் நெடுங் குன்றின்மேல் பொழிந்த, தாரைகள் -
மின்னொடும் துவன்றின மேக ராசியே.

இன் நகைச் = இனிய புன்னகை கொண்ட

சனகியைப் = ஜானகியை

பிரிந்த ஏந்தல் மேல் = பிரிந்த இராமனின் மேல்

மன்மதன் = மன் மதன்

மலர்க் கணை = மலர் கணைகளை

வழங்கினான் என = செலுத்தியதைப் போல

பொன் = பொன் போன்ற

நெடுங் குன்றின்மேல் = பெரிய மலையின் மேல்

பொழிந்த = பொழிந்த, விழுந்த

தாரைகள் = மழையின் தாரைகள்

மின்னொடும் = மின்னலோடு

துவன்றின = நெருங்கி வந்தன

மேக ராசியே. = மேகக் கூட்டமே

மலையின் மேல் மழை விழுகிறது.

மலை = இராமன். மலை போல கரியவன். மலை போல உயர்ந்தவன். மலை போல வலிமை மிகுந்தவன்

மழை = மன்மதனின் அம்புகள். குளிர்விக்கும் மழை, துணை தேட வைக்கும் மழை, சுகம் தரும் மழை.


மின்னல், மேகம், மழை .... எல்லாம் ஒன்றாய் சேர்ந்து நெருங்கி அடித்துக் கொண்டு வருகின்றன.


பாவம் இராமன்....




No comments:

Post a Comment