Sunday, June 10, 2012

இனியவை நாற்பது - கூற்றம் வரவை சிந்தித்து வாழ்தல் இனிது


இனியவை நாற்பது - கூற்றம் வரவை சிந்தித்து வாழ்தல் இனிது


இனியவை நாற்பது என்ற நூலில், வாழ்க்கைக்கு இனிமையான, நன்மை தரும் நாற்பது பாடல்கள் உள்ளன.

பொதுவாக எல்லா பாடல்களும் நாம் அறிந்த விஷயங்களை தான் சொல்கின்றன. 

இந்த ஒரு பாடல் சற்று வித்யாசமாய் இருந்தது.


ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.

கொஞ்சம் சீர் பிரிக்கலாம் 

ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வது இனிதே
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வு இனியது இல்

பொருள் 

ஆற்றானை = ஒரு செயலை செய்ய முடியாதவனை

ஆற்று என்று = செய் செய் என்று

அலையாமை முன் இனிதே = அவன் பின்னால் அலையாமை இனியது

கூற்றம் = எமன்

வரவு உண்மை =நம் வாழ்வில் வருவது உண்மை என்று

சிந்தித்து வாழ்வது இனிதே = சிந்தித்து வாழ்வது இனிமையானது

ஆக்கம் அழியினும் = நம்முடைய செல்வம் அழிந்தாலும்

அல்லவை கூறாத = தவறானவற்றை சொல்லாத

தேர்ச்சியின் = அறிதலின்

தேர்வு இனியது இல் = அதை தேர்ந்து எடுத்து கை கொள்வதை போன்ற

இனியது வேறு ஒன்றும் இல்லை


சில விஷயங்கள் நமக்குத் தெரியும். இருந்தாலும் தெரியாததை போல் இருந்து விடுவோம்.

இருப்பது கொஞ்ச நாள். அதில் ஏன் இந்த போட்டி, பொறாமை, மற்றவர்களை துன்பப்படுத்துதல் எல்லாம்.

இருக்கும் வரை நல்லதை நினைப்போம். நல்லதை செய்வோம். வாழ்கை இனிமையாக இருக்கும்.

1 comment: