Saturday, June 23, 2012

ஆசாரக் கோவை - எதை எல்லாம் பாதுகாக்க வேண்டும்?


ஆசாரக் கோவை - எதை எல்லாம் பாதுகாக்க வேண்டும்?


நம் உடல் நலம், தன் மனைவி, நம்மிடம் பொறுப்பாக பிறர் கொடுத்த பொருள், நம் வாழ்கைக்கு நாம் சேமித்து வைத்த செல்வம் இந்த நான்கையும் பொன் போல பாதுகாக்க வேண்டும்.

தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்கென்
றுன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்
மன்னிய ஏதந் தரும்.

தன்னுடம்பு = தன்னுடைய உடம்பு. அளவோடு சாப்பிடுதல், சிறந்த உடற் பயிற்சி, அளவான தூக்கம், போன்றவற்றால், நம் உடம்பை நாம் பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் நோய் வந்து துன்பப் படுவோம்.

தாரம் = மனைவி

அடைக்கலம் = ஒருவனிடம் அடைக்கலமாக வந்த பொருள் அல்லது ஆள்

தன்னுயிர்க்கென்றுன்னித்து = தன் + உயிர்க்கு + என்று + உன்னித்து = தன் 
வாழ்க்கைக்கு என்று எண்ணி

வைத்த பொருளோ டிவை = (சேமித்து) வைத்த பொருள் இவை

நான்கும் = நான்கும்

பொன்னினைப் போல் = பொன்னைப் போல்

போற்றிக் = உயர்வாக எண்ணி

காத்துய்க்க = காப்பாற்றி வாழ்க

உய்க்காக்கால் = அப்படி வாழாவிட்டால்

மன்னிய = மிகுந்த, நீண்ட

ஏதந் தரும். = துன்பத்தை தரும்



No comments:

Post a Comment