Sunday, June 3, 2012

இலக்கியத்தில் நகைச்சுவை - நீரும் மோரும்


இலக்கியத்தில் நகைச்சுவை - நீரும் மோரும்


தமிழ் இல்லக்கியத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை. நகைச்சுவை, கிண்டல், நையாண்டி, நக்கல் என்று எல்லாம் நிறைந்து கிடக்கிறது.

நகைச்சுவையில் காளமேகம் முதல் இடம் வகிக்கிறார். சிலேடை, கிண்டல் எல்லாம் அவருக்கு கைவந்த கலை.

ஒரு முறை அவர் ஒரு ஆயர் பெண்ணிடம் மோர் கேட்டார். அந்த மோரில், மோரை விட தண்ணீர் அதிகம் இருந்தது. அந்தக் காலத்திலேயே கலப்படம் அவ்வளவு இருந்திருக்கிறது !

அந்த மோரை பார்த்து பாடுகிறார்...

"வானத்தில் இருக்கும் போது மேகம் என்று பெயர் பெற்றாய்,
மண்ணில் வந்த பின் நீர் என்று பேர் பெற்றாய்,
ஆய்ச்சியர் கையில் வந்த பின், மோர் என்று பெயர் பெற்றாய்
இப்படி மூன்று பெயர் உனக்கு"

என்று தண்ணியான அந்த மோரை பற்றிப் பாடுகிறார். 

கார் என்று பேர் பெற்றாய் ககனத்தே உறும்போது
நீர் என்று பேர் பெற்றாய்! நீணிலத்தில் வந்ததன் பின்
வார் என்றும் மென் கொங்கை ஆய்ச்சியர்கை வந்ததன் பின்
மோர் என்று பேர் பெற்றாய்! முப்பேரும் பெற்றாயே!

கார் என்று = மேகம் என்று

பேர் பெற்றாய் = பெயர் கொண்டாய்

ககனத்தே = வானத்தில்

உறும்போது = உள்ள போது

நீர் என்று = நீர் என்று

பேர் பெற்றாய் = பெயர் கொண்டாய்

நீணிலத்தில் வந்ததன் பின் = நிலத்திற்கு வந்ததன் பின்

வார் என்றும் = கச்சை, இரவிக்கை அணிந்த

மென் கொங்கை = 

ஆய்ச்சியர் - ஆயர் பெண்களின்

கை வந்ததன் பின் = கைகளில் வந்த பின்

மோர் என்று பேர் பெற்றாய்! = மோர் என்று பெயர் பெற்றாய்

முப்பேரும் பெற்றாயே! = மூன்று பேரும் பெற்றாய் நீ

மொத்ததில, அந்த மோர் வெறும் தண்ணீர் என்று சொல்லாமல் சொல்கிறார்.


2 comments:

  1. கவிக்குக் காளமேகம் என்று எங்கோ கேட்டிருக்கிறேன். சரிதான்.

    ReplyDelete
  2. அருமையாக விளக்கியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete