Friday, August 31, 2012

பெரிய புராணம் - பிறவாமையும் மறவாமையும்


பெரிய புராணம் - பிறவாமையும் மறவாமையும்


காரைக்கால் அம்மையார் இறைவனிடம் வேண்டுகிறார்.

நாமா இருந்தால் இறைவனிடம் என்ன கேட்போம் ?

சொத்து, சுகம், நல்ல மனைவி/கணவன், ஆரோக்கியமான பிள்ளைகள், பதவி என்று கேட்போம். பக்தி maangal முக்தி, வீடு பேறு என்று கேட்பார்கள். 

காரைக்கால் அம்மையார் கேட்கிறார்...

இறவாத அன்பு வேண்டும் என்று முதலில் கேட்கிறார்.
அப்புறம், பிறவாமை
அப்புறம், மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை 
கடைசியில், இறைவா உன் திருவடிக்கீழ் இருக்கும் முக்தி வேண்டும் என்று கேட்கிறார்.



இறவாத இன்ப அன்பு 
   வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் 
   பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் 
   வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் 
   அடியின்கீழ் இருக்க என்றார். 

பொருள்:

இறவாத இன்ப அன்பு    வேண்டிப் = என்றும் இறவாத இன்பமான அன்பை வேண்டினார். 

பின் வேண்டு கின்றார் = அதற்குப் பின் வேண்டுகிறார்

பிறவாமை வேண்டும் = பிறவாமை வேண்டும்

மீண்டும்   பிறப்புண்டேல் = ஒரு வேளை மீண்டும் பிறந்தால்

உன்னை என்றும் மறவாமை வேண்டும் = (இறைவா) உன்னை என்றும் மறவாமை வேண்டும்

இன்னும்   வேண்டும் = இன்னும் வேண்டும், என்ன தெரியுமா ?

நான் மகிழ்ந்து பாடி = நான் மகிழ்ந்து பாடி

அறவா = அறத்திற்கு நாயகனே

நீ ஆடும் போதுன் = நீ ஆடும் போது 

அடியின்கீழ் இருக்க என்றார். = உன்னுடைய திருவடியின் கீழ் இருக்க வேண்டும்....
 

1 comment:

  1. பெரிய புராணத்தில் காரைக்கால் அம்மையார் வருகிறாரா?!

    ReplyDelete