Friday, September 7, 2012

தனிப் பாடல் - தமிழுக்காக தலை கொடுத்த வள்ளல்


தனிப் பாடல் - தமிழுக்காக தலை கொடுத்த வள்ளல்


குமணன், அவன் தம்பியால் நாட்டை விட்டு விரட்டப் பட்டு காட்டில் இருக்கிறான். குமணனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பரிசு அறிவித்து இருக்கிறான் அவன் பாசக்கார தம்பி.

அப்போது, குமணனிடம்  தன் வறுமையை சொல்கிறான் ஒரு புலவன். குமணனிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. யோசிக்கிறான். தன்னிடம் இல்லை என்று வந்தவனை எப்படி வெறும் கையோடு அனுப்பவுது என்று அவன் மனம் வருந்துகிறது. 

புலவனிடம் சொல்லுவான் "புலவரே, என் தம்பி என் தலைக்கு விலை வைத்து இருக்கிறான். என் தலையை வெட்டி கொண்டு போய் கொடுத்தால் உங்களுக்கு நல்ல சன்மானம் கிடைக்கும். என் தலையயை எடுத்துக் கொள்ளுங்கள்"என்று தலையும் தந்தான்....

பாடல் 

அந்த நாள் வந்திலை அருந்தமிழ்ப் புலவோய்
இந்த நாள் வந்து நீ நொந்து எனை அடைந்தாய்
தலைதனைக் கொடு போய்த் தம்பி கைக் கொடுத்து அதன்
விலைதனைப் பெற்று உன் வெறுமை நோய் களையே

பொருள்

அந்த நாள் வந்திலை = நான் அரசனாக இருந்த அந்த காலத்தில் நீ வரவில்லை 

அருந்தமிழ்ப் புலவோய் = அரிய தமிழ் புலவனே

இந்த நாள் வந்து = இப்ப வந்து 

நீ நொந்து = நீ கஷ்டப் பட்டு

எனை அடைந்தாய் = என்னை வந்து அடைந்து இருக்கிறாய்

தலைதனைக் கொடு போய்த் = உனக்கு கொடுப்பதற்கு என் தலையயை தவிர 
ஒன்றும் இல்லை. என் தலையயை கொண்டு போய்

தம்பி கைக் கொடுத்து = என் தம்பியின் கையில் கொடுத்து

அதன் விலைதனைப் பெற்று = அதற்குள்ள பரிசைப் பெற்று

 உன் வெறுமை நோய் களையே = உன் இல்லாத வெறுமை நோயை நீக்கி கொள் 



2 comments:

  1. இரண்டு நாள் முன்பு எழுதிய பாடலுக்குத் துனைப்பாடல் மாதிரிப் படித்தால் இன்னும் சுவையாக இருக்கிறது.

    ReplyDelete
  2. புறநானூற்றில் இது எத்தனாவது பாடல்?

    ReplyDelete