Friday, September 7, 2012

கலிங்கத்துப் பரணி - மலையில் ஆடி வரும் மயில்கள்


கலிங்கத்துப் பரணி - மலையில் ஆடி வரும் மயில்கள்


காதலன் போருக்கு சென்று திரும்பி வருகிறான்.

அவன் வருவான் வருவான் என்று காத்திருந்து சலித்துப் போனாள் அவள்.

கடைசியாக வந்து விட்டான். ஒரு புறம் அவனை காண வேண்டும் என்று ஆவல். 

மறு புறம் தன்னை காக்க வைத்ததால் வந்த கோவம். "நாம எவ்வளவு நாள் அவனைப் பார்க்காமல் கஷ்டப் பட்டோம்..அவனும் கொஞ்சம் படட்டும்"என்று கதவை திறக்காமல் ஊடல் கொள்கிறாள் காதலி.

அவளை சமாதனப் படுத்த காதலன் கொஞ்சுகிறான்

" நீ நடந்து வருவதே தேர் ஆடி ஆடி வருவது மாதிரி இருக்கு. உன் மார்பில் ஆடும் அந்த chain , அலை பாயும் உன் கண்...எல்லாம் பார்க்கும் போது மலையில் இருந்து ஆடி ஆடி இறங்கி வரும் மயில் போல் இருக்கிறாய் நீ "என்று அவளுக்கு ஐஸ் வைக்கிறான்...
  

விலையிலாத வடமுலையிலாட விழி
குழையிலாட விழைகணவர் தோள்
மலையிலாடி வருமயில்கள் போல வரும்
மடநலீர் கடைகள் திறமினோ!


பொருள்

விலையிலாத = விலை மதிக்க முடியாத

வட = வடம், செயின்

முலையிலாட = உன் மார்பின் மேல் ஆட

விழி = உன் விழியோ

குழையிலாட = காதில் இருக்கும் ஜிமிக்கி போல் அங்கும் இங்கும் ஆடுகிறது, 
தேடுகிறது. எதை தேடுகிறது ?

விழைகணவர் தோள் = உங்களை விழைந்து விரும்பி பார்க்கும் கணவரின் 

தோள்களை தேடுகிறது

மலையிலாடி = மலையின் மேல் ஆடி 

வருமயில்கள் போல வரும் = வரும் மயில்கள் போல வரும்

மடநலீர் = பெண்களே

கடைகள் திறமினோ! = கொஞ்சம் கதவை திறங்கம்மா 


1 comment:

  1. இந்த "கலிங்கத்துப் பரணி" பூராவுமே சும்மா ஜொள்ளுதானா?! தூள்!

    ReplyDelete