Friday, December 28, 2012

திருக்குறள் - பயன் இல்லாத சொல்


திருக்குறள் - பயன் இல்லாத சொல்


யாரவது அவர்களின் கணவனுக்கோ, மனைவிக்கோ, பிள்ளைகளுக்கோ, உடன் பிறப்புகளுக்கோ, பெற்றோருக்கோ , நெருங்கிய நண்பர்களுக்கோ தீமை செய்ய நினைப்பார்களா ?  அப்படி செய்தால் அது எவ்வளவு மோசமான ஒன்று ? அதை விட மோசமானது பலபேர் முன்னால் பயன் இல்லாத சொற்களை கூறுவது. பயன் இல்லாத சொற்களை கூறுவதை வள்ளுவர் மிக மிக வெறுக்கிறார். 

பாடல்

பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது.

பொருள் 

பயன்இல = பயன் இல்லாத (ஏதோ ஒன்றை). பயன் இல்லாத என்றால் கேட்பவர்களுக்கு பயன் இல்லாத சொற்கள். சில பேர் நல்லது சொல்கிறேன், சுவாரசியமான விஷயங்களை சொல்கிறேன் என்று அறுக்க ஆரம்பித்து விடுவார்கள். கேட்பவர்களுக்கு இதில் என்ன பயன் என்று யோசிப்பது கிடையாது. 

பல்லார்முன் சொல்லல் = பலபேர் முன்னால் சொல்லுதல். ஒருத்தரிடம் அல்ல, பலபேரிடம் சொல்லித் திரிவது. எல்லோருடைய நேரத்தையும் வீணடிப்பது
 
நயன்இல = நல்லது இலாத. தீமை என்று சொல்லவில்லை. நன்மை பயக்காத எதுவும் இதில் அடங்கும். ஏன் தீமை என்று சொல்லவில்லை ? அதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது.

நட்டார்கண் = உறவினர்கள்/நண்பர்களுக்கு 

செய்தலின் தீது = செய்வதை விட தீமையானது 

அடுத்த  முறை யாரிடமாவது பேசும்போது, நாம் ஒன்றை சொல்வதனால் கேட்க்கும் அவர்களுக்கு என்ன பயன் என்று அறிந்து பேசுங்கள். மற்றவர்களுக்கு பயன் தரும் விசயங்களைப் பேசுங்கள்.  நீங்கள் பேசுவது ரொம்ப குறைந்து விடும். 

முட்டாளிடம் நல்லதை கூறி என்ன பயன் ?

நாத்திகனிடம் கடவுளைப் பற்றி கூறி என்ன பயன் ?

அது எல்லாம் பயன் தராது.

அது அப்படி இருக்கட்டும்...உற்றாருக்கு நல்லது அல்லாததை செய்வது தீமை என்கிறார் வள்ளுவர். அவரே, தீமை கூட செய்யலாம் என்று கூறி இருக்கிறார்...எப்போது தெரியுமா ?


1 comment:

  1. When we talk, we gain nothing. When we listen, we gain something. Many times, I feel this way.

    ReplyDelete