Wednesday, January 30, 2013

புறப் பொருள் வெண்பா மாலை - பெண்ணின் காதல் படிகள்


புறப் பொருள் வெண்பா மாலை - பெண்ணின் காதல் படிகள் 


காதல் பெண்ணையும் விடுவது இல்லை.

பெண்ணின் காதல் எப்படி எல்லாம் உருப்பெறுகிறது என்று பார்ப்போம்.

பாடல்

காண்டல் , நயத்தல் , உட்கோள் , மெலிதல்,
மெலிவொடு வைகல் , காண்டல் வலித்தல்,
பகல் முனிவு உரைத்தல் , இரவு நீடு பருவரல்,
கனவின் அரற்றல் , நெஞ்சொடு மெலிதல்,
பெண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.

பொருள்





காண்டல் = காணுதல். கனவிலும் நனவிலும் காணுதல். கனா கண்டேன் தோழி நான் என்று எப்பவும் , எங்கும் அவனைக் காணுதல்.

நயத்தல் = நயத்தல் என்றால் அன்பை வெளிப் படுத்துதல்...குறிப்பாக தலைவி தலைவனிடம் அன்பை கூறுதல்.

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி 
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே

உட்கோள் = உள்ளக் கருத்து, நெஞ்சோடு பேசுதல், மனதுக்குள்ளேயே காதலை பூட்டி வைத்து இரசித்தல்


மெலிதல் = உணவு பிடிக்காமல், சாப்பிடாமல் மெலிதல்.மனமெல்லாம் காதல்...பசி எங்கே எடுக்கும்

மெலிவொடு வைகல் = மெலிந்ததால் வந்த சோர்வு, தளர்ச்சி.

காண்டல் வலித்தல் = எப்படியாவது அவனை காண முடிவு செய்தல்.

பகல் முனிவு உரைத்தல் = பகல் பொழுதை வெறுத்துக் கூறுதல்.

இரவு நீடு பருவரல் = தூக்கம் வராமல், இரவு நீண்டு கொண்டே போகிறதே என்று அவஸ்தைப் படுதல்

கனவின் அரற்றல் = கனவில் அவனைக் கண்டு உளறுதல்

நெஞ்சொடு மெலிதல் = தன் மனதோடு புலம்பி வருந்தி மெலிதல், சோர்தல்

பெண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும் = இவை எல்லாம் பெண்ணின் ஒரு தலை இராகம் ஆகும்


1 comment:

  1. இந்தப் பாடலையும், இதற்கு முந்திய பாடலையும் சேர்த்துப் படித்தால் ... இதில் ஆண்களுக்கு இது, பெண்களுக்கு இது என்று எப்படி வகைப்படுத்தினாரோ? பல நிகழ்வுகள் ஆண்/பெண் இருவருக்குமே பொருந்தும் போல் இருக்கிறதே!?

    ReplyDelete