Tuesday, January 15, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - நாமம் நாவில் அமரும்படி


இராமானுஜர் நூற்றந்தாதி - நாமம் நாவில் அமரும்படி 


என் நாவில் ஏதேதோ தேவை இல்லாத விஷயங்கள் எல்லாம் வந்து கொண்டு இருக்கிறது. பொய், புறம் சொல்லுவது, முகஸ்துதி சொல்லுவது, பயனற்ற விஷயங்களைப் பேசுவது என்று தேவை இல்லாமால் பல விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறது என் நாக்கு. 

இராமானுசரே, எனக்க ஒரே ஒரு வேண்டுகோள் தான் உண்டு. இரவும் பகலும் உன் நாமம் மட்டும் என் நாவில் தங்கி இருக்கும்படி செய்து விடும்...வேறு எதுவும் வேண்டாம்....

எங்கே நாவில் நாமம் நின்றால், ஒரு வேலை நடந்து எங்காவது போய் விடுமோ என்று அஞ்சி, நாமம் அமரும் படி வேண்டுகிறார். 

பாடல்

சொல்லின் தொகைகொண் டுனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பரேத்து முன்நாமமெல்லா மென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலு மமரும்படிநல் கறுசமயம்
வெல்லும்பரம விராமாநுச விதென் விண்ணப்பமே.

சீர் பிரித்த பின் 

சொல்லின் தொகை கொண்டு உனது அடிப் போதுக்கு தொண்டு செய்யும் 
நல்ல அன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவினுள்ளே 
அல்லும் பகலும் அமரும்படி நல்க அறு சமயம்
வெல்லும் பரம ராமானுஜ இது என் விண்ணபமே

பொருள்

சொல்லின் தொகை கொண்டு = சொல்லின் தொகுதிகளை கொண்டு

உனது அடிப் போதுக்கு = உனது திருவடி என்ற மலர்களுக்கு 

தொண்டு செய்யும் = தொண்டு செய்யும் 
 
நல்ல அன்பர் = நல்ல அன்பர்கள் 

ஏத்தும் = போற்றும்
 
உன் நாமம் எல்லாம்

எந்தன் நாவினுள்ளே = எந்தன் நாவின் உள்ளே
 
அல்லும் பகலும் = இரவும் பகலும்

அமரும்படி = நிரந்தரமாக இருக்கும் படி

நல்க = அருள்வாய்

அறு சமயம் = மற்ற சமயங்களை

வெல்லும் = வெல்லும்

பரம ராமானுஜ = ஆச்சாரியானான இராமானுஜனே

இது என் விண்ணபமே = எது என் விண்ணப்பம் 

 

2 comments:

  1. This is the thaniyan i like the most.அல்லும் பகலும் அமரும்படி நல்க அறு சமயம்,வெல்லும் பரம ராமானுஜ இது என் விண்ணபமே-Excellent lines.Thanks.

    ReplyDelete
  2. அருமையான பாடல். "அல்லும் பகலும் அமர வேண்டும்" - என்ன இனிய கருத்து. நன்றி.

    ReplyDelete