Monday, January 7, 2013

திருக் குறள் - அறத்தின் பெருமை


திருக் குறள் - அறத்தின் பெருமை 


அறத்தின் பெருமை என்ன என்று அறிந்து கொள்ள வேண்டுமானால் எங்கும் போக வேண்டாம். பல்லக்கின் மேல் இருப்பவனையும், பல்லக்கு தூக்குபவனையும் பார்த்தாலே போதும்.

பாடல்



அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைப்
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பொருள் 

அறத்தாறு = அறத்தின் பயன்

இதுவென = இது என்று அறிய எங்கும் 

வேண்டா = போக வேண்டாம் 

சிவிகைப் = பல்லக்கு 

பொறுத்தானோடு = தூக்கிக் கொண்டு செல்பவனோடு 

ஊர்ந்தான் இடை.= அதன் மேல் இருப்பவன், இரடு பேருக்கும் இடையில் உள்ள வேறுபாடு தான் அறத்தின் பயன்.

அறவழியில் நிற்பவர்கள் பல்லக்கில் போவார்கள். அர வழியில் நில்லாதவர்கள் பல்லக்குத் தூக்கி திரிவார்கள்.

இந்த குறள் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது.

பல்லக்கு தூக்குவது என்ன பெரிய பாவமா ? அதுவும் ஒரு வேலை தானே. அதை ஏன் கீழான தொழிலாக நினைக்க வேண்டும்? மேலும், பல்லக்கில் ஏறி போபவர்கள், அந்த பல்லக்கிலேயே நிரந்தரமாய் இருக்க முடியுமா ? காலம் மாறும், ஏறியவன் இறங்க நேரிடலாம்....

பரிமேல் அழகரும் மேல் சொன்ன அர்த்தத்தை தான் சொல்லி இருக்கிறார்.

வள்ளுவர் அப்படி சொல்லுவாரா ? இதற்க்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்.

அடுத்து வரும் ப்ளொக்குகளில் பார்ப்போம்...நீங்கள் விரும்பினால். 

நீங்கள் விரும்பினால், please click the g+ button below....

1 comment:

  1. இதை தெரிந்து கொள்ள யாருக்காவது விருப்பம் இல்லாமல் இருக்குமா என்ன ?

    ReplyDelete