Tuesday, February 19, 2013

பிரபந்தம் - கூனி மேல் அம்பு விட்டது கிருஷ்ணன்

பிரபந்தம் - கூனி மேல் அம்பு விட்டது கிருஷ்ணன் 


கூனியின் மேல் மண் உருண்டை அடித்தது இராமன். 

ஆனால் நம்மாழ்வார் வேறு மாதிரி சொல்கிறார். மண் உருண்டையை அடித்தது கிருஷ்ணன் என்று சொல்கிறார்.

கூனி வருவது இராம அவதாரத்தில். கிருஷ்ண அவதாரம் அடுத்த அவதாரம். கூனிக்குப் பின் வந்த கிருஷ்ணன் எப்படி கூனியின் மேல் அம்பு விட்டிருக்க முடியும் ?

இது என்ன புதிதாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ?

இராமன் மேல் பழி அவ்வளவு கிடையாது. தாடகை என்ற பெண்ணை கொன்றான், வாலியை மறைந்து நின்று கொன்றான், விராடன் (?) என்ற அரக்கனோடு சண்டை போடும் பொது முன் வைத்த காலை பின் வைத்தான் என்று சில குற்ற சாட்டுகள் உண்டு.

கண்ணன் மேல் ஆயிரம் பழி ஏற்கனவே இருக்கிறது. பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று இந்த பழியையும் தூக்கி கண்ணன் மேலேயே போடுகிறார் நம்மாழ்வார்.


பாடல்

மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே.(2839)

பொருள் 




மானேய் நோக்கி = மான் போன்ற விழிகளை கொண்ட 

மடவாளை = பெண்ணை, திருமகளை 

மார்வில் கொண்டாய் = மார்பிலி கொண்டாய் 

மாதவா = மாதவனே 

கூனே சிதைய = கூன் சிதைய (நிமிர)

வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் = உண்டை வில் எறிந்தாய் (நிறத்தில் என்பதற்கு சரியான அர்த்தம் கிடைக்கவில்லை )

கோவிந்தா! = கண்ணா 

வானார் சோதி = வான் நிறைந்த ஜோதியான 

மணிவண்ணா = மணி வண்ணா 

மதுசூ தா = மது சூதனா 

நீ யருளாய் = நீ அருள் செய்வாய் 

உன் = உன்னுடைய 

தேனே = தேன்  போன்ற 

மலரும் திருப்பாதம் = மலரும் திருவடிகளை 

சேரு மாறு = வந்து அடையுமாறு 

வினையேனே = வினை உள்ள நானே 

No comments:

Post a Comment