Saturday, March 30, 2013

ஓராண்டு நிறைவு !


ஓராண்டு நிறைவு !


இந்த ப்ளாக் ஆரம்பித்து இன்றோடு ஓராண்டு ஆகிறது. 31-மார்ச் - 12 அன்று தொடங்கியது இந்த ப்ளாக். 

இதுவரை ....

603 ப்ளாகுகள் 
32,000 பக்க வாசிப்புகள் (page views)
5,687 வாசிப்பாளர்கள் (visitors )
326 நகரங்கள் (cities )

........

எல்லோருக்கும் நன்றி. எல்லாவற்றிற்கும் நன்றி. 


இன்னும் எழுதுவேன் 

7 comments:

  1. 31st March 2012ல் இருந்து நீங்கள் செய்யும் தமிழ் தொண்டை நன்றியுடன் கொண்டாட வேண்டிய நன்னாள் இது. நீங்கள் அறிமுகப் படுத்தியுள்ள பல விதமான பாடல்கள் மறக்க முடியாதவை. The repertoire is amazing. திருக்குறள் விளக்கம் ஓவ்வொன்றும் நம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லிக் கொடுக்க வேண்டிய ஒன்று. அபிராமி அந்தாதி என்றால் ஏதோ கோவிலில் மட்டும் பாடுவது என்று நினைத்துக் கொண்டு இருந்த பொழுது நீங்கள் எழுதிய விளக்கத்தை படித்து விட்டு கடவுளிடம் பக்தி செய்வது என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன் . திரு வாசகத்திற்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று கேள்வி தான் பட்டு இருக்கிறேன். ஆனால் அதற்கு விளக்கம் எழுதி நிஜமாகவே உருக வைத்து விட்டீர்கள். கம்ப ராமாயணம் பற்றி சொல்லுவதென்றால் நான் தனி blog ஆரம்பிக்க வேண்டும். வெவ்வேறு கோணங்களில் ராமாயணத்தை ரசிக்க கற்று கொடுத்ததற்கு நன்றி சொல்லுவதா இல்லை தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகப் படுத்தியதற்கு நன்றி சொல்லுவதா பல விதமான பாடல்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி சொல்லுவதா என்று தெரிய வில்லை.
    I am reminded of a famous quote of a leading actress which says " He doesn't love me because I am beautiful but I am beautiful because he loves me". I draw a contrast with respect to your knowledge on various subjects because of which even a dry subject becomes lovable. I wish you all the best and May you continue sharing the abundance of knowledge with us.

    Meenakshi Vidyasagar

    ReplyDelete
  2. மேலே மீனாட்சி அவர்கள் எழுதியதை அப்படியே நகல் எடுத்துப் பதிவு (copy-paste) செய்துவிடலாம் போல இருக்கிறது! அவ்வலவு சரியாக என் உணர்ச்சிகளை எழுதி விட்டார்.

    இந்த வலைப்பதிவு இல்லை என்றால் நான் இத்தனை தமிழ்ப் பாடல்களைத் தேடிப் படித்திருக்க மாட்டேன்.

    5 பேருக்கு எழுதி வந்ததை, 5000 பேர் படிக்கும்படி ஆக்கியிருக்கிறது இந்த வலைப்பதிவு. ஆனால் 5 மில்லியன் பேர் படிக்கும்படி இன்னும் பெரிய பத்திரிகை அல்லது செய்தித்தாளில் எழுத வேண்டும். இந்த சிறந்த முயற்சிக்கு அதுவே சரியான சன்மானம்.

    இன்னும் பல்லாண்டுகள் எழுதவும், இன்னும் பல கோடிப் பேர் படிக்கவும் என் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Congratulations! On behalf of all your blog readers WISH YOU A VERY VERY HAPPY BLOG ANNIVERSARY. Keep writing. Keep enjoying. THANK YOU FROM ALL OF US.

    ReplyDelete
  4. தெளிவான சிந்தனை, தேர்ந்தெடுத்த எழுத்துக்கள், எளிதாக புரிய வைக்க எடுக்கும் முயற்சி, அனைத்தும் அருமை.சில நாட்களாக உங்கள் பக்கங்களை படித்து வருகிறேன். படிக்கும் போது, ஒரு சுகமும், நிம்மதியும், ஒருங்கே கிடைக்கிறது. இது தான் தமிழமுது என்பதா? நிறைய பாடல்களை உணரும் வண்ணம் சிறப்பாக கொடுத்தமைக்கு நன்றி. உங்கள் எழுத்துக்களை, இளஞ்சிறார்களுக்கு எழுத்தறிவிக்கும் இறைவன்களும் படித்து அறவழியில் அவர்களை திருப்ப வேண்டும் என மனம் விழைகிறது. எனக்கு தமிழ் மேல் ஒரு விருப்பத்தை ஏற்படுத்தியவர்களில், முதன்மையானவர், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். (எனக்கு எழுத்தறிவித்த இறைவன்கள் ஒரு பக்கம்). அந்த வரிசையில் உங்களை பார்க்கிறேன். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நன்றியுடன் - ஸ்ரீதர், மினிசோட்டா (அமெரிக்கா)விலிருந்து.

    ReplyDelete
  5. I started reading this Blog for the past two months and very much impressed with the way it carried the meaning for all our tamil poems. As rightly pointed out, Thirukkural meaning is differently viewed and it is for the whole world for all times. All children should learn Thirukkural and understand the meaning and lead a very healthy life. My hearty congratulations. Hope you will carry more literary articles in this blog.

    ReplyDelete
  6. அருமை அருமை விளக்கங்கள் எளிமை. தொடர்க தங்கள் தொண்டு. அபிராமி அருள் புரிவாள்.

    ReplyDelete