Saturday, March 9, 2013

இராமானுசர் நூற்றந்தாதி - கலைக் கவி பாடும் பெரியவர்

இராமானுசர் நூற்றந்தாதி - கலைக் கவி பாடும் பெரியவர்

இறைவனை அடைய , முக்தி பெற, உண்மை உணர, வீடு பேறு அடைய பொதுவாகச் சொல்லப்பட்ட வழி கானகம் சென்று, கல் மேலும் , முள் மேலும் நின்று தவம் இயற்றுவது

அது எல்லாம் எல்லாராலும் ஆகின்ற காரியம் அல்ல.

உடலை வருத்தாமல், அன்பால், பக்தியால், ஆசாரியனிடத்தில் சரணடைவதன் மூலம் அவற்றை அடையலாம்

பாடல்


கதிக்குப் பதறிவெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற் றேன்,கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமா னுசனென்னைச் சோர்விலனே.

பொருள்






கதிக்குப் பதறி = செல்லும் இடம் நினைத்து பதறி


மதிகெட் டறவாடி மயங்கியறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா திபவத்
திதிபுத்திரர் வீறடு சேவகனே.


கதி கெட்டு அவமே கெடவோ என்று ஏங்குகிறார் அருணகிரி

வெங் கானமும் = வெம்மையான கானகமும்

கல்லும் = மலையும் 

கடலுமெல்லாம் = கடலும் எல்லாம்

கொதிக்கத் தவம்செய்யும் = கொதிக்கும்படி தவம் செய்யும்

கொள்கையற் றேன் = கொள்கை அற்றேன். எனக்கு அந்த கொள்கை எல்லாம் கிடையாது. ஏன் ?

கொல்லி காவலன் = கொல்லிமலை காவலன், அதாவது குலசேகர  ஆழ்வார்

சொல் பதிக்கும் = சொல் பதிக்கும். சொல் மனதில் பதிய வேண்டும். சொல் பதிய வேண்டும் என்றால் மனம் நெகிழ வேண்டும். வைரத்தை தங்க ஆபரணத்தில் பதிக்க வேண்டும் என்றால் தங்கத்தை இளக்க வேண்டும். நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி

கலைக்கவி பாடும் பெரியவர் = கலைக் கவி பாடும் பெரியவர்

பாதங்களே = பாதங்களே

துதிக்கும் பரமன் இராமா னுசனென்னைச் சோர்விலனே. = துதிக்கும் பரமன் இராமானுசன் என்னை கை விட மாட்டான். என்னை சோர்வடைய செய்ய மாட்டான்.




1 comment:

  1. இராமானுசர் குலசேகர ஆழ்வாரின் பெயர் பாடினாரா? இந்த இருவரில் முன்னவர் யார்? கொஞசம் குழம்பிவித்டேன்.

    ReplyDelete