Monday, May 13, 2013

பெரிய புராணம் - கடல் வயறு நிறையாத


பெரிய புராணம் - கடல் வயறு நிறையாத 



காவிரி ஆறு கிளை கிளையாக பிரிந்து வரும் வழியில் உள்ள வயல்களை எல்லாம் வளம் செய்து , தன்னிடம் உள்ள நீரை எல்லாம் வாரி வழங்கி கடைசியில் கடலுக்கு வரும் போது ஒன்றும் இல்லாமல் வந்து சேர்கிறது ....ஏன் தெரியுமா ?

எருதின் மேல் வரும் சிவனுக்கு அமுது அளிக்காமல் விஷம் தந்ததால், எவ்வளவு போட்டாலும் வயறு நிறையாத கடலுக்கு ஒன்றும் தர வேண்டாம் என்று நினைத்து காவிரி தன் இடம் உள்ளது எல்லாம் உலக்குக்கு வழங்கி விட்டது...

பாடல்

தட நிலை மாளிகைப் புலியூர் தன்னில் உறைந்து இறைஞ்சிப் போய்
'அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே
விடம் அளித்தது' எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே
கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார்.

பொருள்






தட நிலை = பெரிய நிலைகளை கொண்ட

மாளிகைப் = மாளிகைகளை கொண்ட

புலியூர் தன்னில் = புலியூர்

 உறைந்து = வாழ்ந்து

 இறைஞ்சிப் போய் = வணங்கிப் போய்

அடல் விடையின் = வலிமையான எருதின்

மேல் வருவார் = மேல் வருவார்

 அமுது செய = அமுது உண்ண வந்தபோது

 அஞ்சாதே =  அஞ்சாமல்

விடம் அளித்தது' = ஆலகால விஷத்தை அளித்தது

 எனக் கருதி = என்று நினைத்து

மேதினிக்கு = உலகுக்கு

 வளம் நிறைத்தே = வளம் நிறையும்படி செய்து

கடல் வயிறு நிறையாத = கடலின் வயற்றை நிறைக்காத

 காவிரியின் கரை அணைந்தார். = காவிரி பூம்பட்டினம் வந்து சேர்ந்தார்

(பின் குறிப்பு: சேக்கிழார் புகழேந்திக்கு காலத்தால் முந்தியவர் )





1 comment:

  1. என்ன ஒரு இனிமையான கற்பனை!

    ReplyDelete