Thursday, May 30, 2013

திருக்குறள் - இல்லாமையிலும் பெரிய இல்லாமை

திருக்குறள் - இல்லாமையிலும் பெரிய இல்லாமை 


எல்லோரிடமும் எல்லாமுமா இருக்கிறது ?

வீடு, நகை, சொந்த உல்லாச படகு, ஒரு கப்பல், சொந்த விமானம், நமக்கென்று ஒரு தீவு, இராஜா மாதிரி அதிகாரம், அழியாத புகழ் இப்படி பட்டியல் போட்டுக் கொண்டே போனால் அந்த பட்டியல் முடியாது.

அப்ப எவ்வளவு இருந்தால் போதும் ?

எவ்வளவுதான் இருந்தாலும், இல்லாததின் அளவு மிகப் பெரியதாய் இருக்கிறதே ? என்ன செய்யலாம் ?

சில விஷயங்கள் இல்லாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது.

வள்ளுவர் கூறுகிறார், அறிவு இல்லாததுதான் இந்த இல்லாததிலேயே பெரிய இல்லாதது. மத்தது எல்லாம் இல்லாவிட்டாலும், இந்த உலகம் அதை பெரிதாய் நினைக்காது.

பாடல்

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.

பொருள்





அறிவின்மை = அறிவு இல்லாமல் இருப்பது

இன்மையுள் இன்மை = இல்லாததர்க்குள் பெரிய இல்லாமை

பிறிதின்மை =மத்த இல்லாதது

இன்மையா வையா துலகு. = இல்லாதது என்று உலகம் நினைக்காது.

ஒருவனிடம் நிறைய அறிவு இருக்கிறது. ஆனால் செல்வம் இல்லை என்றால், அவனது வறுமையை இந்த உலகம் பெரிதாக நினைக்காது.


ஒருவனிடம் நிறைய அறிவு இருக்கிறது. ஆனால் நல்ல உடல் இல்லை. உடல் ஊனம், அல்லது நிறம் கொஞ்சம் கம்மி, கண்ணு சரியா தெரியாது, இப்படி உடற் குறைபாடுகள் இருக்கலாம்...

அழகு இல்லாமல் இருக்கலாம்

அல்லது ஆரோக்கியம் இல்லாமல் இருக்கலாம்

இதை எல்லாம் இந்த உலகம் பெரிதாக நினைக்காது.

அது எப்படிங்க ஏற்றுக் கொள்ள முடியும் ? முட்டாள் பயல்கள் நிறைய பணம் வைத்துக் கொண்டு எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ? இந்த உலகம் பணம் படைத்தவனை  தானே கொண்டாடுகிறது என்று நீங்கள் கேட்கலாம்.

உலகம் என்பது இட ஆகு பெயர்.

அந்த பள்ளிக் கூடம் மிக நல்ல பள்ளி கூடம் என்று சொன்னால் அது நல்ல செங்கல்  சிமிண்டால் செய்யப்பட்டது என்று அர்த்தமா ?

அல்ல.

நல்ல பள்ளி கூடம் என்றால், நன்றாக சொல்லித் தருவார்கள், ஒழுக்கமாக வளர்ப்பார்கள்  என்று பொருள்.

உலகம் என்றால் இங்குள்ள ஆடு, மாடு, செடி, கொடி,  இவை அல்ல.

உலகம் என்பது நல்லோர் மாட்டு என்பது நிகண்டு.

நல்லவர்கள், அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள் மற்ற குறைகளை பெரிதாக நினைக்க மாட்டார்கள். அறிவின்மையை பெரிய குறையாக நினைப்பார்கள்

எனவே உங்களிடம் குறை இருந்தால், இருக்கும், என்ன செய்ய வேண்டும் ?

அறிவு இல்லாத குறையை முதலில் போக்க வேண்டும். அதற்க்கப்புறம் மற்ற குறைகளை பாருங்கள் - என்று வள்ளுவர் சொல்லுகிறார்.




3 comments:

  1. என்ன ஒரு அருமையான குறள். தமிழ் தெரிந்ததற்காக பெருமை படாமல் இருக்க முடியவில்லை.

    ReplyDelete
  2. உலகு என்பது சிறந்தவரையே குறிக்கும் என்ற வாதம் எனக்கு மிகப் பிடித்திருக்கிறது.

    இந்தக் குரளை என் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரப் போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. I read this Kural to my wife. She said "Lack of kindness is worse than lack of arivu." It is an interesting point. Of course, one can argue that with the right kind of arivu, one will get kindness, but we see so many people who are intelligent but vain and unkind. One can argue that such people don't have the "right kind" of arivu. That would make the argument circuitous.

      Delete