Monday, May 20, 2013

ஆத்திச் சூடி - நுண்மை நுகரேல்

ஆத்திச் சூடி - நுண்மை நுகரேல்



உடல் நலத்திற்கு முதல் எதிரி அளவுக்கு அதிகமாக உண்பது. அதிலும் முக்கியமாக சாப்பாட்டிற்கு இடையில் கொறிக்கும் சிற்றுண்டிகள் - சமோசா, வடை, முறுக்கு, பிஸ்கட்,காபி, டீ  போன்ற நொறுக்கு தீனிகள் பானங்கள்.

இவற்றை முற்றுமாக தவிர்க்க வேண்டும் என்கிறார் அவ்வையார்.

நுண்மை என்றால் சிறிய என்று  பொருள்.

சின்ன சின்ன உணவு வகைகள், சிற்றுண்டிகள் இவற்றை தவிர்க்க சொல்கிறார்.

இதையே இன்னும் கொஞ்சம் விரித்து பார்த்தால் சிறிய விஷயங்கள் என்றால் வாழ்க்கைக்கு பயன் தராத சில்லறை விஷயங்கள் -   புகை பிடிப்பது, புறம் சொல்லுவது, சூதாடுவது, போன்ற பலன் இல்லாத விஷயங்கள் என்றும் கூறலாம்.

வாழ்க்கையில் பெரிய விஷயங்களை நுகருங்கள்.

கல்வி, ஒழுக்கம், சேவை என்று நீண்ட பலன் தரும் விஷயங்களை நுகருங்கள்.

இரண்டு வார்த்தைகள் ...எவ்வளவு விஷயங்கள்.


1 comment:

  1. நல்ல சூட்சுமமான விளக்கம்.

    நுண்மையான அர்த்தங்களை நுகர வேண்டும் அல்லவா, ஆனால் நுண்மை நுகரேல் என்பது இந்த விளக்கத்தைப் படிக்காமல் புரிந்து கொள்ள முடியாது.

    நன்றி.

    ReplyDelete