Wednesday, May 8, 2013

தனிப் பாடல் - வைகை ஏன் கடலில் கலக்கவில்லை ?


தனிப் பாடல் - வைகை ஏன் கடலில் கலக்கவில்லை ?



நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும் வைகை கடலில் கலக்காமல் ஒரு பெரிய ஏரியில் போய் கலக்கும் விஷயம்.

ஏன் வைகை நதி கடலில் கலக்கவில்லை ?

பாற்கடலை கடைந்த போது, அந்த கடல் சிவனுக்கு நஞ்சை கொடுத்தது. அந்த பாற் கடலுக்கு இந்த கடல் எல்லாம் உறவுதானே என்று நினைத்து, இப்படி பட்ட கடலுக்கு நாம் ஏன் நீர் தரவேண்டும் என்று வைகை நதி தன்னிடம் உள்ள நீரை எல்லாம் வரும் வழியில் இரு புறமும் உள்ள வயல்களுக்குத் தந்து விட்டு மீதி உள்ள கொஞ்ச நீரை ஒரு ஏரியில் கொண்டு செலுத்தி விடுவதாக புகழேந்திப் புலவர் கற்பனை செய்கிறார்.....

பாடல்

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.



பொருள் 


நாரியிட பாகருக்கு = நாரி என்றால் பெண். பெண்ணை இடப் பாகம் கொண்டவருக்கு

நஞ்சளித்த பாவியென்று = நஞ்சு அளித்த பாவியென்று

வாரியிடம் = கடலிடம்

புகுதா வைகையே = புகாத வைகையே 

மாறி = அதற்க்கு மாறாக

இடத்தும் புறத்தும் = இடப் புறமும் வலப் புறமும்


இருகரையும் பாய்ந்து = இரண்டு கரைகளும் பாய்ந்து

நடத்தும் = நல்வழி நடத்தும்

தமிழ்ப் பாண்டிய நாடு.= தமிழ் வளர்க்கும் பாண்டிய நாடு


இப்பவாவது தெரிஞ்சுக்குங்க ஏன் வைகை கடலில் கலக்கவில்லை என்று. 


3 comments:

  1. என்ன ஒரு எளிமையான, இனிமையான கற்பனை. காலம் கடந்து நிற்கும் சுவை. beautiful.

    ReplyDelete
  2. மதுரையில் வளர்ந்து கூட, வைகை கடலில் கலக்கவில்லை என்பது இன்றுதான் தெரிந்தது!

    அருமையான கற்பனை.

    ReplyDelete
  3. இப்பாடலில் இராமநாதபுரம் ஓர் வரண்ட பூமி என்று அன்றே புகழேந்தி மறைமுகமாக கூறியுள்ளார்.

    ReplyDelete