Friday, June 7, 2013

அபிராமி அந்தாதி - சிந்துர வண்ணப் பெண்ணே

அபிராமி அந்தாதி - சிந்துர வண்ணப் பெண்ணே 


என் தலையில் இருப்பது எப்போதும் உன் பொன் போன்ற திருவடிகளே.

என் சிந்தனையில் எப்போதும் நிலைத்து இருப்பது உன் திரு மந்திரமே

சிவந்த பெண்ணே

உன்னுடைய அடியார்களுடன் கூடி முறையாக நான் பண்ணியது உன்னுடைய பரம ஆகம பக்தியே.

பாடல்


சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே 
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.- 
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே 
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

பொருள்





சென்னியது = சென்னி என்றால் தலை. என் தலையின் மேல் இருப்பது

உன் பொன் திருவடித் தாமரை = உன்னுடைய பொன் போன்ற திருவடி  தாமரை

சிந்தையுள்ளே = என்னுடைய சிந்தையுள்ளே

மன்னியது = நிலைத்து நிற்பது

உன் திரு மந்திரம் = உன் திரு மந்திரம்

சிந்துர வண்ணப் பெண்ணே = சிவந்த வண்ணமுள்ள பெண்ணே

முன்னிய நின் அடியாருடன் கூடி = முதலிலே உன் அடியாருடன் கூடி

முறை முறையே = முறையாக

பன்னியது = நான் செய்தது

என்றும் உந்தன் பரமாகம பத்ததியே எப்போதும் உன் பரம ஆகம பக்தியே



1 comment:

  1. கடவுளைப் பற்றி எழுதிய பாடலின் நடுவே, ஒரு அன்னியோன்னியமான பதம்!

    ReplyDelete