Thursday, July 11, 2013

ஜடாயு - இராவண ஜடாயு யுத்தம்

ஜடாயு - இராவண ஜடாயு யுத்தம் 


ஜடாயு எவ்வளவோ புத்தி சொன்னான்.

இராவணன் கேட்டான் இல்லை.

இருவருக்கும் பெரிய சண்டை மூழ்கிறது.

கம்பனின் யுத்த வர்ணனைகள் பற்றி தனியே ஒரு புத்தகம் எழுதலாம்.

சண்டையில், இராவணன் ஜடாயுவை தாக்கி அவனை மூர்ச்சையாக செய்கிறான்.

ஜடாயு சுதாரித்துக் கொண்டு எழுகிறான்

எழுந்தவுடன் இராவணனை பயங்கரமாக தாக்குகிறான் அவன் பத்து தலைகளையும் தன் அலகினால் கொத்தினான், தன் கூறிய நகத்தால் கீறினான், அவனுடைய பறந்த (பரந்த) சிறகுகளால் அடித்தான்..

பாடல்
 

ஒத்தான் உடனே உயிர்த்தான்; உருத்தான்; 
     அவன் தோள் 
பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் 
     தத்தி, மூக்கால் 
கொத்தா, நகத்தால் குடையா, 
     சிறையால் புடையா, 
முத்து ஆர மார்பில் கவசத்தையும் 
     மூட்டு அறுத்தான்.

பொருள்





ஒத்தான் = வெண் மேகத்தை ஒத்தவனாகிய ஜடாயு. ஏன் வெண் மேகம் ? முந்தைய பாடலில் இருந்து வந்தது. மேகம் நீரை உண்டு கருத்து பின் மழை பொழிந்து மீண்டும் வெண்மையாவது  போல, கருடனும் போரிட்டு, இரத்தம் கொண்டு, பின் மீண்டும் வெண்மையாகிறது. அது வருவது வேறு பாடலில். 

உடனே உயிர்த்தான் = உடனே சுதாரித்து கொண்டு உயிர்த்தான்

உருத்தான் = சினம் கொண்டான்

அவன் தோள் பத்தோடு பத்தின் = பத்தோடு பத்து என்றால் இருபது தோள்கள்.

நெடும் பத்தியில் = நீண்ட வரிசையில் 

தத்தி = தவ்வி தவ்வி

மூக்கால் கொத்தா = அலகால் கொத்தி

நகத்தால் குடையா = நகத்தால் குடைந்து

சிறையால் புடையா = சிறகால் அடைத்து

முத்து ஆர மார்பில் = முத்து ஆரம் தவழும் மார்பில்

கவசத்தையும் மூட்டு அறுத்தான் = கவசத்தின் பூட்டுகளை அவிழ்த்தான்



No comments:

Post a Comment