Saturday, July 13, 2013

ஜடாயு - படர் கற்பினாள்பால் மோகம் படைத்தான்

ஜடாயு - படர் கற்பினாள்பால் மோகம் படைத்தான் 




இராவணன் முத்தலை சூலாயுதத்தை ஜடாயு மேல் எறிந்தான். அந்த வேல், ஜடாயுவை தாக்காமல் திரும்பி வந்தது. இராவணன் அடுத்த படையை எடுப்பதற்கு முன் பறந்து வந்து இராவணனின் தேர் பாகனின் தலையை கொய்து இராவணன் மேல் எறிந்தான்.

பாடல்

வேகமுடன், வேல இழந்தான் படை வேறு எடாமுன்,
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர்ப்
பாகம் தலையைப் பறித்து, படர் கற்பினாள்பால்
மோகம் படைத்தான் உளைவு எய்த, முகத்து எறிந்தான்.

பொருள்





வேகமுடன் = வேகத்துடன்

வேல இழந்தான் = வேல் படையை இழந்தவன்

படை வேறு எடாமுன் = வேறு படை எடுப்பதற்கு முன்

மாகம் மறையும்படி = திசைகள் மறையும் படி

நீண்ட வயங்கு மான் தேர்ப் = நீண்ட (பெரிய) குதிரைகள் பூட்டிய தேரின் (மான் என்றால் விலங்கு)

பாகம் தலையைப் பறித்து = பாகனின் தலையை பறித்து

படர் கற்பினாள்பால் = பெரிய கற்பு உடையவளான சீதையின் பால் 

மோகம் படைத்தான் = மோகம் கொண்டவனின் (இராவணனின்) முன்

உளைவு எய்த = வருந்தும்படி

முகத்து எறிந்தான். = முகத்தில் எறிந்தான் 

No comments:

Post a Comment