Friday, July 19, 2013

ஜடாயு - சித்தி செய்த சூழ்ச்சியோ?

ஜடாயு - சித்தி செய்த சூழ்ச்சியோ?


இராவணன் போரிட்டு ஜடாயுவை வீழ்த்திய பின், சீதையை கொண்டு செல்கிறான்.

தரையில் விழுந்த ஜடாயு யோசிக்கிறான்...

இராம இலக்குவர்களோடுதான் சீதை வந்து இருக்கிராள் . அவர்கள் இருக்கும் போது, அவர்களை வென்று சீதையை கவர்ந்து செல்ல முடியாது. பின்ன எப்படி இந்த இராவணன் அவளை கொண்டு செல்கிறான். ஒரு வேளை இதுவும் கைகேயின் சூழ்ச்சியாக இருக்குமோ, ஒண்ணும் புரியலையே என்று குழம்புகிறான் ஜடாயு.


பாடல்  

'வெற்றியர் உளர்எனின், மின்னின் 
     நுண் இடைப் 
பொன்-தொடிக்கு, இந் 
     நிலை புகுதற்பாலதோ? 
உற்றதை இன்னது 
     என்று உணரகிற்றிலேன்;
சிற்றவை வஞ்சனை, 
     முடியச் செய்ததோ?


பொருள்





'வெற்றியர் உளர்எனின் = வெற்றி பெறக் கூடிய தோள் வலி உள்ள இராம இலக்குவர்கள் உடன் இருந்தால் 

மின்னின் = மின்னலைப் போன்ற

நுண் இடைப் = சிறிய இடையை கொண்ட சீதையை

பொன்-தொடிக்கு = பொன்னால் ஆன ஆபரணங்களை அணிந்த (அரண்மனையை விட்டு கிளம்பும் போது மர உறி உடுத்துதான் கிளம்பினாள் . பொன் ஆபரணம் எப்படி வந்தது ? தெரியவில்லை ) சீதைக்கு


இந்  நிலை புகுதற்பாலதோ? = இந்த நிலைமை எப்படி வந்தது ?

உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன் = நடந்தது என்ன என்று அறிய முடியவில்லையே

சிற்றவை = சித்தி (கைகேயி)

வஞ்சனை = வஞ்சனை

முடியச் செய்ததோ? = இப்படி முடியவேண்டும் என்று செய்தாளோ ?

வால்மீகியும் கம்பனும் சில பாத்திரங்களை படைத்தது கதைக்காக அல்ல....சில அறங்களை , நீதிகளை சொல்வதர்க்காக.

ஜடாயு பாத்திரம் இல்லாவிட்டால் காப்பிய போக்கு ஒண்ணும் மாறி இருக்காது


இராவணன் சீதையை கவர்ந்து சென்றான்.

இந்து சமயத்தில், இந்திய நாட்டில் ஒரு மிகப் பெரிய சமூக மலர்ச்சிக்கு  வித்திட்டது  ஜடாயு பாத்திரம்.

அதை இனி வரும் ப்ளாகுகளில் பார்ப்போம்




No comments:

Post a Comment