Tuesday, July 16, 2013

திருக்குறள் - நாணம்

திருக்குறள் - நாணம் 


நாணம்.

பெண்களுக்கு இயல்பாகவே உள்ளது. ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று அல்ல, அதைப் பற்றி பேசினாலே, நினைத்தாலே பெண்களுக்கு நாணம் வரும். அது ஒரு வகை நாணம்.

அதே போல் இன்னொரு நாணமும் இருக்கிறது.

அது என்ன நாணம் தெரியுமா ?

செய்யத் தகாத காரியங்களை பற்றி எண்ணும் போது சான்றோர்க்கு மனதில் தோன்றும் நாணம்.

சில விஷயங்களைப் பற்றி எண்ணும் போதே நம் மனம் கூசும் அல்லவா ?  அதுதான் இரண்டாவது வகை நாணம்.

பாடல்

கருமத்தா னாணுத னாணுத் திருநுத
னல்லவர் நாணுப் பிற.

சீர் பிரிக்காமல் புரியாது

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.


பொருள் 

கொஞ்சம் வார்த்தைகளை இடம் மாற்றிப் போடுவோம் 

நாணும் கருமத்தால் நாணுதல் 
பிற திருநுதல் நல்லவர் நாணு 

பொருள்  



நாணும் கருமத்தால் நாணுதல் = நாண வேண்டிய செயல்களுக்கு நாணுதல் 
 
பிற திருநுதல் நல்லவர் நாணு = நுதல் என்றால் நெற்றி. திரு நுதல் என்றால் அழகிய ஒளி பொருந்திய நெற்றி.  திரு நுதல் நல்லவர் என்றால் அழகிய ஒளி பொருந்திய நெற்றியை கொண்ட  குல மகளிர். அவர்கள் நாணுவது மற்றொரு வகையான நாணம் (பிற என்றால் மற்றது).

பெண்களுக்கு நாணம் மனம், மொழி, மெய்யால் வருவது. நினைத்தால் கூட நாணம் வரும் அவர்களுக்கு. 

அப்படி செய்யத் தகாத காரியங்களை நினைத்த மாத்திரத்தில் பெரியோருக்கு ஒரு நாணம் வரும். 

 

3 comments:

  1. அப்பா... கடினமான குறள்!

    ReplyDelete
  2. without your explanation it was very hard to understand this kural. you are doing a wonderful job. thanks and keep it up.

    ReplyDelete
  3. really good explanation.

    ReplyDelete