Sunday, October 13, 2013

திருக்குறள் - மனைவிக்குப் பயந்தவன்

திருக்குறள் - மனைவிக்குப் பயந்தவன் 



மனையாளை யஞ்சு மறுமையி லாளன் 
வினையாண்மை வீறெய்த லின்று.

மனைவிக்கு பயந்தவனுக்கு இரண்டு தீமைகள் நிகழ்கின்றன. 

ஒன்று , இந்தப் பிறவியில் அவனுக்கு நன்மை கிடையாது. அவன் செய்யும் வினைகளுக்கு வெற்றி கிடையாது. அதாவது, மனைவிக்கு பயந்து அவள் சொல்வதை கேட்டு அதன்படி செய்பவனுக்கு காரியம் வெற்றி பெறாது. அவன் தோல்வியே அடைவான்.

இரண்டாவது, அவனுக்கு மறு பிறப்பிலும் அல்லது சொர்கத்திலும் நல்லது நடக்காது. இம்மை பயன் மட்டும் அல்ல, மறுமை பயனும் கிடைக்காது அவனுக்கு. 

பொருள் 

மனையாளை = மனைவியின். மனையாள் என்றால் அது மனைவியை குறிக்காது என்று தமிழ் தெரியாத சிலர் வாதம் புரியக் கூடும். மனையாள், மனை விழைவான் என்பன ஆகு பெயர்கள். அந்த வீடு சொர்கம் போல என்றால் அந்த வீட்டில் உள்ள செங்களும் சிமின்டும் அல்ல. அதில் உள்ள மனிதர்கள், அவர்களின் குண நலன்கள். தமிழில் பல ஆகு பெயர்கள் உண்டு. 

யஞ்சு = அஞ்சுபவன், அவள் சொல்வதை கேட்டு நடப்பவன், அவள் சொல்வதருக்கு மறுப்பு சொல்லாதவன் 

மறுமையி லாளன் = அவனுக்கு மறுமை பயன் எதுவும் இல்லை. வாழ்க்கையே இல்லை என்கிறோமே அது போல  

வினையாண்மை வீறெய்த லின்று = வினை + ஆண்மை + வீறு + எய்தல் + அன்று = அவன் செய்யும் வினைகள் எந்த பயனையும் தராது. 

இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தராதது - மனைவி சொல்லை கேட்பது. 

வள்ளுவர் சொல்கிறார். பரிமேல் அழகர் சொல்கிறார்....

2 comments:

  1. Nature is the master of symmetry. எங்கே பார்த்தாலும் எதில் பார்த்தாலும் ஒரு அழகான balance இருக்கும். மிக சிறிய எரும்பு, இலைகளில் இருந்து மிக பெரிய யானை வரை இந்த symmetry இருக்கும்.

    அதே மாதிரிதான் குடும்பம், வாழ்க்கை என்பதுவும். கணவன், மனைவி ஒரு உடலின் இரண்டு பக்கங்கள் மாதிரிதான். ஒரு கால் நீளமாகவும், ஒரு கால் குட்டையாகவும் இருந்தால் எப்படி இருக்குமோ , ஒரு கண் பெரிதாகவும் ஒரு கண் சிறிதாகவும் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் கணவன், மனைவிகளுக்கிடையில் இருக்கும் ஏற்ற தாழ்வுகளும் இருக்கும். ஒருவர் உயர்ந்தவர் மற்றவர் தாழ்ந்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை.

    ஒரு வண்டி மிக பெரியதாக இருக்கலாம். மிகுந்த பாரம் சுமக்கலாம். அச்சாணி சிறியதாக இருக்கலாம். ஒன்றுமே செய்யாத மாதிரியும் தெரியலாம். ஆனால் அச்சாணி இல்லாமல் வண்டி இல்லை, வண்டி இல்லாம அச்சாணியும் இல்லை. அதுதான் அதன் சிறப்பு.ஒரு ஆணால் சில காரியங்களி சிறப்பாக செய்ய முடியும் என்றால் ஒரு பெண்ணால் வேறு சில காரியங்களி சிறப்பாக செய்ய முடியும். A very good family means they have to COMPLIMENT each other. That will be the best home. கணவன் பேச்சை மனைவி கேட்க வேண்டும் மனைவி பேச்சை கணவன் கேட்க்க கூடாது என்பதெல்லாம் சுத்த ​​​​​​​​​​​​​ _______________ தனம்.

    திருக்குறள் மீதும், திருவள்ளுவர் மீதும் எனக்கு மிக பெரிய மரியாதை உண்டு. 2000 வருடங்குக்கு முன் எழுத பட்ட பாடல்கள் இன்று வரை எல்லா நாடு மதம் இனத்துக்கும் பொருந்துவதாக இருப்பதில் எனக்கு மிக பெரிய பிரமிப்பு உண்டு. இதற்காகவே தமிழச்சியாய் இருப்பதில் ஒரு கர்வம் கூட உண்டு.
    அதே போல் இந்த blog ன் மிக பெரிய ரசிகையும் கூட.

    ஆனால் என்ன செய்வது. விதி விலக்கு இல்லாத விஷயங்களே கிடையாது போல் இருக்கிறது.133 அதிகாரங்களில் ஒரே ஒரு அதிகாரம் சர்ச்சைகுரியதாக அமைந்து விட்டது. என்னால் இந்த ஒரு விஷயத்தில் திருவள்ளுவருடனும், பரிமேல் அளகருடனும், RS உடனும் ஒத்து போக முடியவில்லை. நான் ஒன்றும் இவர்கள் போல் சிறந்த அறிவாளி கிடையாது. அதற்காக என்னுடைய கருத்துகளை பதியாமல் விடவும் முடியாது.

    ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் ஒருவரை புரிநது கொண்டு, .ஒருவர் பேச்சை ஒருவர் கேட்டு சிறந்தது எதுவோ அதன் படி நடப்பதே நல்ல குடும்பமாக இருக்க முடியும். மணைவி பேச்சை கேட்டால் நாணம் வரும், நாசமா போவான், நகைக்கு ஆளாவான் என்பது எல்லாம் ஒத்துக்கொள்ள கூடிய விஷயம் இல்லை.

    இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எத்தனை பேருக்கு இது சரி என்று படுகிறதோ தயவு செய்து ஒரு பெரிய "ஓ" போடுங்கள். இல்லை, வள்ளுவரும் , பரிமேல் அழகரும் RS ம் தவறே செய்ய மாட்டார்கள் என்று நினைப்பவர்கள் ஒரு NO போடுங்கள். பாப்போம்.

    ReplyDelete