Wednesday, October 2, 2013

திருக்குறள் - பெண்வழிச் சேறல்

திருக்குறள் -  பெண்வழிச் சேறல்


பெண் சொல்வதை , குறிப்பாக மனைவி சொல்வதை கேட்டால் நல்ல பயனை அடைய மாட்டார்கள் என்றும் ; நல்ல பயனை விரும்புவார்கள் மனைவி சொல்வதை கேட்க மாட்டார்கள் என்றும் வள்ளுவர் சொல்கிறார்.

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.

பொருள்


மனைவிழைவார்  = மனைவியின் அன்பை, அவள் தரும் இன்பத்தை அடைய விரும்புவார்
மாண்பயன் எய்தார் = சிறந்த பயன்களை அடைய மாட்டார்கள்
வினைவிழைவார் = செயலை விரும்புபவர்கள்
வேண்டாப் பொருளும் அது. =  வேண்டாத அல்லது விரும்பாத பொருளும் அது. அதாவது செயல் திறனை விரும்புபவர்கள் மனைவியின் பேச்சை கேட்க மாட்டார்கள்

இது நான் சொல்லுவது இல்லை.

பரிமேலழகர் சொல்கிறார் ... மனைவியின் சொல்லை கேட்பவர்கள் அறத்தின் பயனை அடைய மாட்டார்கள் என்று.


மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்;

வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம்.

மனக் குடவர் , தேவ நேய பாவாணர் போன்றோரும் இதைப் போலவே உரை எழுதி இருக்கிறார்கள்.

வள்ளுவர் பொய்யா மொழி புலவர். பரிமேலழகர் மிகச் சிறந்த உரை ஆசிரியர்.

அவர்கள் பிழையாக ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல , பத்து பாடல்கள் எழுதி இருக்கிறார் வள்ளுவர் - பெண் வழி சேராதே என்று.....




3 comments:

  1. யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். உனக்கும் அடி சறுக்கி விட்டதே!

    மனைவிழைவார் என்றால் மனைவி விழைவார் இல்லை, மனை விழைவார். இந்த மனைக்கு அர்த்தம் வேறு. வள்ளுவர் அந்த அர்த்தத்தில் எழுதுபவர் அல்ல. அவரே அவர் மனைவி வாசுகியை மிகவும் மதித்தவர்.
    Something went wrong somewhere. இந்த அத்தியாயம் எழுத வேண்டாம்.

    ReplyDelete
  2. RS மட்டும் அல்ல, ஏன் பரிமேலழகர் முதலோரும் இப்படியே பொருள் எழுதியுள்ளார்கள்? எந்த விஷயத்தையும் கேட்காமல் அஞ்சி விடுவதை விட, கேட்டுவிட்டு விடுவது சிறந்தது. எனவே, இந்த அத்தியாயத்தை விட வேண்டாம். எழுதவேண்டும் என்று தோன்றினால் எழுதுக.

    (வள்ளுவர் வாசுகியை மதித்ததாக என்ன சான்று உள்ளது?)

    ReplyDelete
  3. புவனா அவர்கள் "மனைவிழைவார் என்றால் மனைவி விழைவார் இல்லை, மனை விழைவார். இந்த மனைக்கு அர்த்தம் வேறு" என்று சொல்கிறார். நானும் வேறு என்ன அர்த்தம் இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன் - தெரியவில்லை. பரிமேலழகரே "மனையாள்" என்று எழுதி விட்டாரே!

    ஆனால், பரிமேலழகர் நுணுக்கமாக "இன்பம் காரணமாக" மனைவியை விழைய வேண்டாம் என்கிறார். அப்படி என்றால், சும்மா இன்பம் மட்டுமே கருதி, மனைவியை விரும்புபவர் தனது பயனைத் தவற விட்டு, வேலையையும் விட்டு விடுவார்கள் என்று கொள்ளலாம் அல்லவா? (சும்மா பெண்டாட்டி பின்னாலேயே சுத்திகிட்டு இருக்காதே, வேலையைப் பார் என்று பொருள்.)

    ReplyDelete