Wednesday, October 23, 2013

குறுந்தொகை - யாயும் ஞாயும்

குறுந்தொகை - யாயும் ஞாயும் 


தலைவியும் தலைவனும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் வயப் படுகிறார்கள். அவர்கள் உள்ளம் ஒன்றோடு ஒன்று கலக்கிறது.

என்ன ஆச்சரியம் !

கலந்தது அவர்கள், ஆனால் அவளின் தாய்க்கும் அவனின் தாய்க்கும் உறவு ஏற்பட்டது. அவர்கள் உறவினர்கள் ஆகி விட்டார்கள். அவனின் தந்தைக்கும் அவளின் தந்தைக்கும் உறவு ஏற்பட்டது. அவர்களும் உறவினர்கள் ஆகி விட்டார்கள். நிலத்தோடு கலந்த நீர் நிலந்தின் தன்மையை பெறுவதைப் போல அவளின் மனம் அவனோடு இரண்டற கலந்து விட்டது.

குறுந்தொகையில் உள்ள ஆச்சரியமான எளிமையான பாடல்

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

பொருள்


யாயும் ஞாயும் யார் ஆகியரோ? = என் தாயும் உன் தாயும் யார் ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? = என் தந்தையும் உன் தந்தையும் எந்த விதத்தில் உறவினர்கள்

யானும் நீயும் எவ்வழி அறிதும்? = நீயும் நானும் எந்த வழியில் உறவினர்கள் ?

செம்புலப் பெயல் நீர் போல = சிவந்த நிலத்தில் விழுந்த நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. = அன்பு கொண்ட நெஞ்சங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தனவே

3 comments:

  1. "என் தாயும், உன் தாயும் நண்பிகளா? இல்லை.
    என் தந்தையும், உன் தந்தையும் உறவினரா? இல்லை.
    நானும் நீயும் எந்த வழியில் ஒருவரை ஒருவர் அறிவோம்?
    இருந்தாலும் ...
    சிவந்த நிலத்தில் விழுந்த நீர் போல
    அன்பு கொண்ட நம் இருவரின் நெஞ்சங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தனவே!"

    ஆகா, என்ன ஒரு எளிமை. ஏதோ இரண்டு இளம் வயதினரைக் கண்முன் காண்பது போல, அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்பது போல இருக்கிறது!

    இந்த மாதிரி முத்தான பாடல்களைத் தேடிக் கொடுப்பதற்கும், அருமையான விளக்கம் எழுதுவதற்கும் நன்றி.

    ReplyDelete
  2. தமிழ் இலக்கியம் மிக அருமை

    ReplyDelete
  3. சோலச்சிApril 16, 2024 at 8:22 PM

    சிறப்பு

    ReplyDelete