Tuesday, October 29, 2013

கம்ப இராமாயணம் - வாசகம் என்னும் அனல்

கம்ப இராமாயணம் - வாசகம் என்னும் அனல்


அரசன் என்னை கானகம் போகச் சொன்னான் என்று இராமன் சொன்ன அந்த வாசகம் தீ போல் கோசலையின் காதில் நுழைந்தது. தீயை தொட வேண்டும் என்று அல்ல..அருகில் சென்றாலே  சுடும்.அது போல அந்த வாசகம் அவள் காதைத் தொடவில்லை...அதற்கு முன்பே சுட்டது என்றான் கம்பன்.


பாடல்

ஆங்கு, அவ் வாசகம் என்னும் அனல், குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்,
ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள்; மனம்
வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் அரோ.


பொருள்





ஆங்கு = அங்கு

அவ் வாசகம்  = இராமன் கானகம் போக வேண்டும் என்ற வாசகம்

என்னும் அனல் = என்ற தீ. அந்த வாசகமே தீ என்றான் கம்பன். அது தீப் போல இல்லை,  அதுவே தீ.

குழை தூங்கு = குழை என்றால் காதில் அணியும் ஒரு ஆபரணம் (கம்மல்). அது தூங்கும் என்றான். அசையாமல் நிற்கிறது.

தன் செவியில் தொடராமுனம் = அந்த வாசகம் தோடு அணிந்த அவள் செவியை தொடு  முன்

ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள்; = ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள்

மனம் வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் அரோ. = மனம் வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் அரோ.

அரசின் மேல் அவளுக்கு பற்று இல்லை. அரசு போனால் போகட்டும் என்று இருந்து விட்டாள்.


மகன் மேல் பற்று. இராமனை பிரிய மனம் இல்லை.

எப்படி இருக்கும் ? முதன் முதலாக பார்த்த குகனே "உன்னை இங்ஙனம் பார்த்த  கண்ணை ஈர்கிலா கள்வனேன் " என்றான்.

தாய் அல்லவா ? துக்கம் மேலிடுகிறது....

அந்த துக்கத்திலும் அவள் என்ன கேட்டாள்  தெரியுமா ?




1 comment:

  1. என்ன அருமையாக இந்த உணர்வைக் கம்பர் சொல்லி இருக்கிறார்!

    ReplyDelete