Monday, December 1, 2014

தேவாரம் - ஏழிசையாய் இசைப்பயனாய்

தேவாரம் - ஏழிசையாய் இசைப்பயனாய்


இளையராஜாவின் இனிமையான இசையை கேட்டு மெய் மறக்கிறோம். கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்த்தானி சங்கீதம், என்று பலவிதமான இசைகளை கேட்கிறோம்.

இந்த இசையின்  பயன் என்ன ?

இந்த இசைகளை கேட்பதால் நமக்கு என்ன கிடைக்கிறது ?

சுந்தரர் சொல்கிறார், இசையும் அதன் பயனும் இறைவனே  என்கிறார்.

அது மட்டும் அல்ல, அவன் இனிய அமுதமாய் இருக்கிறான்.

இறைவனை, நண்பனாகக் கண்டவர் சுந்தரர்.

சுந்தரருக்கு ஏதோ ஒன்று அறியக் கிடைத்து இருக்கிறது. அதை நினைத்து நினைத்து உருகுகிறார். அது வாழ் நாள் பூராவும் இன்பம் தரக் கூடியது என்கிறார்.

பாடல்

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய 
தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை 
ஆழநினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந் 
தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே. 

பொருள்

ஏழிசையாய் =  ஏழிசையாய்

இசைப்பயனாய் = இசையின் பயனாய்

இன்னமுதாய் = இனிய அமுதமாய்

என்னுடைய தோழனுமாய் = என்னுடைய நண்பனுமாய்

என்று = என்று

முன் நீ சொன்ன = முன்பு நீ சொன்ன 

பெருஞ் சொற்பொருளை = பெரிய சொல்லின் பொருளை

ஆழ நினைத்திடில் = ஆழமாக யோசித்தால்

அடியேன் = என்

அருங்கரணம் = அருமையான பொறிகள் எல்லாம்

கரைந்துகரைந் = கரைந்து கரைந்து

தூழியல் = ஊழிக் காலம் வரை

இன்புறுவது காண் = இன்பம் அடைவது காண்

உயர்கருணைப் பெருந்தகையே = உயர்ந்த கருணை கொண்ட பெரியவனே

அவர் அறிந்த அது என்னவாக இருக்கும் ?





6 comments:

  1. ஏழிசை, இசைப் பயன், இன்னமுது... அதெல்லாம் சரி... ஆனால் திடீரென்று நண்பன் என்று ஒரு வார்த்தை! ஏனோ?! மற்ற எல்லா உறவுகளையும் விட்டுவிட்டு, நட்பை மட்டும் சொல்லிய காரணம் என்னவாய் இருக்கும்?

    ReplyDelete
  2. தேவாரமல்ல.
    இது திருவருட்பா.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. திருவருட் பா 5ம்பாட்டு 11- திரு ஆளு டைப்பிள்ளை

      Delete
  3. Thevaram or Thiruvarutpa?

    ReplyDelete