Saturday, February 6, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அன்பு செய்யும் அடியாரை உகத்தி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - அன்பு செய்யும் அடியாரை உகத்தி 


நாம் கடவுள் மேல் அன்பு செய்வது ஒரு புறம் இருக்கட்டும். 

கடவுள் யார் மேல் அன்பு செய்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?


நல்ல பணக்காரன், படிப்பு அறிவு உள்ளவன், உயர்ந்த குலத்தில் பிறந்தவன், ஆசார அனுஷ்டானங்களை கடை பிடிப்பவன் என்று தேர்ந்து எடுத்து அவர்கள் மேல் அன்பு செய்வானோ என்றால் இல்லை என்கிறார் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார். 


இறைவன் யார் மேல் பிரியமாக இருப்பான் என்றால், அவன் மேல் யார் அன்போடு இருக்கிறார்களோ அவர்கள் மேல் அவனும் அன்போடு இருப்பான். அவ்வளாவு தான். இறைவனுக்கு தெரிந்தது எல்லாம் அன்பு ஒன்று தான். குலம், கோத்திரம், ஜாதி, மதம், பணம், அறிவு இதெல்லாம் இறைவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. 


அன்பு ஒன்று அவன் அறிந்து மொழி. 


பாடல் 


அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில்

குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்

முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற் கன்பு செய்யும்

அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post.html


(plese click the above link to continue reading)


அடிமையில் = தொண்டு செய்வதில் 

குடிமை யில்லா = உயர் குடியில் பிறக்காத 

அயல் = வேறானா 

சதுப் பேதி மாரில்  = நான்கு வேதங்களையும் கற்று அறிந்த வேதியர்களை விடவும் 

குடிமையில் = குடிப்பிறப்பில் 

கடைமை பட்ட = கீழான 

குக்கரில் பிறப்ப ரேலும் = குடும்பத்தில் பிறந்தாலும் 

முடியினில் துளபம் = தலையில் துளசி மாலையை 

வைத்தாய் = வைத்தவனே 

மொய்கழற் கன்பு செய்யும் = உன்னுடைய திருவடிகளுக்கு அன்பு செய்யும் 

அடியரை யுகத்தி போலும் = அடியவர்கள் மேல் ஆர்வம் (உகத்தி) போலும் 

அரங்கமா நகரு ளானே. = திருவரங்கத்தில் எழுந்து அருளி இருப்பவனே 


பெருமாளுக்கு பேதம் இல்லை. 

எவ்வளவு பாராயணம் பண்ணினாலும், எத்தனை முறை திருப்பிச் சொன்னாலும், மனதில் அன்பு இல்லாவிட்டால் ஒன்றும் பயன் இல்லை. 




4 comments:

  1. செல்வம்,குலம்,படிப்பு என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல பகவானுக்கு.அவரிடம் அன்பு செலுத்துவதையே உள்ளம் கொண்டவனாகி இருந்தால் அது ஒன்றே போதும் அவரின் கருணை கடாக்ஷத்திற்கு என்கிறார் போல

    ReplyDelete
  2. "ஒரு ஏழைக்குச் செய்யும் தொண்டு இறைவனுக்குச் செய்யும் தொண்டாகும்" என்றார் காந்தி அடிகள்.

    இங்கே இறைவன் மேல் அன்பு செய்வது என்றால் என்ன? சும்மா கோவில் மண்டபத்தில் உட்கார்ந்து 24 மணி நேரம் சபம் செய்வதா?

    ReplyDelete