Tuesday, April 17, 2012

தேவாரம் - மனித பிறவியும் வேண்டும்

தேவாரம் - ஒரு முன்னோட்டம்

தேவாரம் எழுதியது யார் என்று கேட்டால் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மற்றும் மாணிக்க வாசகர் என்று பொதுவாக எல்லோரும் சொல்லுவார்கள். 

அது பிழை.

திரு நாவுக்கரசர் பாடியது மட்டும் தான் தேவாரம். 

சைவ சிந்தாந்தத்தில் திரு முறைகள் பன்னிரண்டு. 

1 -2- 3 - திரு முறைகள் திரு ஞான சம்பந்தர் பாடியது. அதற்க்கு திருக் கடை காப்பு என்று பெயர்.

3,- 4,- 5 - திரு முறைகள் திரு நாவுக்கரசர் பாடியது - தேவாரம் என்று பெயர்

தே + ஆரம் = தேவாரம் = இறைவனுக்கு மாலை. சாதாரண பூ மாலை காலையில் போட்டால் மாலைக்குள் வாடிவிடும். நாவுக்கரசர் பாடிய தேவாரம் 1400 ஆண்டுகள் (இவர் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர். நாம் இருப்பது 21 ஆம் நூற்றாண்டு. 14 நூற்றாண்டுகள் இடையில்) கழித்தும் வாடாமல் இன்றும் மணம் வீசிக் கொண்டு இருக்கிறது.

இவர் சைவ சமயத்தில் பிறந்து, சமண மதத்திற்கு சென்று, பின் மீண்டும் சைவ சமயத்திற்கு வந்தவர். 

இவர் பாடல்கள் மிகுந்த ஆழமும், அழகும் கொண்டவை. 

அந்த தேவரத்தில் இருந்து சில பாடல்கள்.....

Monday, April 16, 2012

திரு அருட்பா - குடத்தில் அடங்கும் கடல்

திரு அருட்பா - குடத்தில் அடங்கும் கடல்



அன்பே சிவம்.

இறைவனை பக்தியால், அன்பால் எளிதாக அடைய முடியும் என்கிறார் வள்ளலார். அன்பின் பெருமையை சொல்ல வந்த வள்ளலார்....

திருவாசகம் - பால் நினைந்து ஊட்டும்


திருவாசகம் - பால் நினைந்து ஊட்டும்


திருவாசகத்தில் 'பிடித்த பத்து' என்று பத்து பாடல்கள் மாணிக்க வாசகர் அருளிச் செய்திருக்கிறார். அதில் இருந்து ஒரு மிக மிக இனிய பாடல். 

திரு வாசகம் - ஒரு முன்னோட்டம்


திரு வாசகம் - ஒரு முன்னோட்டம் 


தன் பெருமை அறியா ஊர்கள் பல உண்டு.

அதில் ஒன்று மதுரைக்கும் மேலுருக்கும் இடையில் உள்ள திருவாதவூர்.

மாணிக்க வாசகர் அவதரித்த தலம்.

ஊரின் நடுவே ஒரு பேருந்து நிலையம். அதை சுற்றி சில பொட்டி கடைகள்.

சற்று தள்ளி மாணிக்க வாசகர் பிறந்த இல்லம் இருக்கிறது. மிக மிக சிறிய வீடு. மின்சார விளக்கு இல்லை. உள்ளே ஒரு தீபம் மினுங்கி கொண்டு இருந்தது.

எவ்வளவு பெரிய மகான். அவர் பிறந்த வீட்டிற்கு செல்லும் வழி கூட நன்றாக இல்லை. மனசுக்கு என்னவோ போல் இருந்தது.

இராமாயணம் - காப்பியத்தின் போக்கை மாற்றிய வரம்


இராமாயணம் - காப்பியத்தின் போக்கை மாற்றிய வரம் 


கடவுள்கள் வரம் கொடுத்து பட்ட பாடு நிறைய உண்டு.

இராமாயணத்திலும் நிறைய இடங்களில் வரங்கள் வருகிறது.

சுவாரசியமான வரங்கள், கதைக்கு சுவை கூட்டுவன, சில புதிய திருப்பங்களை கொண்டு வருவன...

அதில் முதலில் வருவது கைகேயி கேட்ட இரண்டு வரங்கள்...

Sunday, April 15, 2012

கம்ப இராமாயணம் - கைகேயி வரமும் தசரதன் புலம்பலும்


கம்ப இராமாயணம் - கைகேயி வரமும் தசரதன் புலம்பலும் 


தசரதனின் கடைசி காலம் புலம்பலில் முடிகிறது. முதலில் கைகேயிடம் புலம்புகிறான். பின், இராமனை காட்டுக்கு அனுப்பிவிட்டு அவனை நினைத்து புலம்புகிறான். 

கைகேயிடம் கெஞ்சுகிறான். 

இராமன் மேல் கொண்ட பாசம் ஒருபுறம், இராசநீதி தவறி விடக் கூடாதே என்ற ஆதங்கம் மறுபுறம், கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலை இன்னொரு புறம்...

தசரதன் தவிக்கிறான்....அந்த தவிப்பை கம்பன் இங்கே படம் பிடிக்கிறான் 


கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன்
என் உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ?பெண்ணே! வண்மைக் கைகேயன் மானே! பெறுவாயேல்மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற”

மண்ணே கொள் = இந்த இராஜியத்தை எடுத்து கொள்

கைகேயி இரண்டு வரங்களை கேட்டு விட்டாள். ஒன்று பரதன் நாடாள , மற்றது இராமன் காடாள.

என் கண்ணை வேண்டுமானாலும் தருகிறேன், என் உயிரை வேண்டுமானாலும் தருகிறேன், முதல் வரத்தை பெற்றுக் கொள், இரண்டாவது வரத்தை மற என்று கெஞ்சுகிறான்.

கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன் = என் கண்கள் வேண்டும் என்றாலும் \நான் தருகிறேன்

என் உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ? = என் உயிர் வேண்டுமா, அது உனது, எடுத்துக் கொள்
பெண்ணே! = நீ பெண் அல்லவா (கொஞ்சம் பெண்மையின் இரக்கம் இருக்காதா என்று சொல்லிப் பார்க்கிறான் )

வண்மைக் கைகேயன் மானே! = ஹுஹும் ... அவள் அசைந்த பாடு இல்லை...கைகேயேன் குலத்து பிறந்த மானே

பெறுவாயேல் = வேண்டும் என்றால்


நீ மற்றையது ஒன்றும் மற = அந்த இன்னொரு வரத்தை மறந்து விடு (கேட்காதே என்று சொல்லவில்லை, மற என்கிறான் )


கம்ப இராமாயணம் - திகைக்காத இராமன்


கம்ப இராமாயணம் - திகைக்காத இராமன்


இராமன் முடி சூட வருகிறான்.

பட்டத்து இளவரசன்.

அயோத்தி மாநகரமே விழாக் கோலம் பூண்டு இருக்கிறது.

எவ்வளவு சந்தோஷமா இருக்கும்.

கைகேயியை பார்க்கிறான்.

அவள் அவனை கானகம் போகச் சொல்லுகிறாள்.

சொன்ன அந்த கணத்தில் இராமனுக்கு எப்படி இருந்திருக்கும் ?

ஒரு வினாடி திகைதிருப்பானா ? பின் சுதாரித்து இருப்பானோ ?

ஒரு துளியாவது வருத்தம் இருந்திருக்குமா ? நான் ஏன் காட்டுக்குப் போக வேண்டும் என்று கேட்டு இருப்பானா ?

ஒரு வினாடி இராமனின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கம்பனைத் தவிர யாராலும் அந்த இடத்தை இவ்வளவு அழகாக சொல்லி இருக்க முடியாது.
.
இராமனின் முகம் அவள் சொன்னதை கேட்பதற்கு முன்னும், கேட்ட பின்னும் தாமரை மலர் மாதிரி இருந்ததாம், கேட்ட அந்த ஒரு வினாடி தாமரை அந்த நொடியில் மலர்ந்த மாதிரி இருந்ததாம்.


-----------------------------------------------
இப் பொழுது, எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்டஅப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!

---------------------------------------------------

இப் பொழுது = இப்போது, அது நடந்து முடிந்த எத்தனையோ ஆண்டுகளுக்கு பின், ஆற அமர யோசித்து இப்போது

எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? = எம் போன்ற கவின்ஞர்களுக்கு சொல்லுவது எளிதா ? இல்லவே இல்லை.

யாரும் செப்ப அருங் குணத்து இராமன் = யாராலும் சொல்ல முடியாத அளவுக்கு சிறந்த குணங்களை கொண்ட இராமனின்

திருமுகச் செவ்வி நோக்கின் = செம்மையான திரு முகத்தை நோக்கினால்

ஒப்பதே முன்பு பின்பு = அந்த வாசகத்தை கேட்பதற்கு முன்னும் பின்னும் தாமரையை ஒத்து இருந்தது

அவ் வாசகம் உணரக் கேட்ட அப் பொழுது = ஆனால் அந்த வாசகத்தை கேட்ட அந்த ஒரு கணத்தில்


அலர்ந்த செந்தா மரையினை வென்றது அம்மா! = அப்போது தான் மலர்ந்த செந்தாமரையை மிஞ்சி நின்றது அவன் முகம்



அந்த வாசகத்தை கேட்ட உடனே, முகம் மலர்ந்ததாம். மலர்ந்த செந்தாமரையை விட இன்னும் சிறப்பாக இருந்ததாம்.