Pages

Wednesday, April 11, 2012

கம்ப இராமாயணம் - பாதங்கள் இப்படி என்றால், படிவங்கள் எப்படியோ




இராமா, உன்னுடைய திருவடியே இப்படி என்றால், உன் பெருமை எப்படியோ இருக்குமோ என்று சிலிர்க்கிறார் கம்பர்.


------------------------------------------------------------------
வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னின், படிவங்கள் எப்படியோ?ஓதம் கொள் கடல் அன்றி, ஒன்றினோடு ஒன்று ஒவ்வாப்
பூதங்கள்தொறும் உறைந்தால், அவை உன்னைப் பொறுக்குமோ?
--------------------------------------------------------------


வேதங்கள் அறைகின்ற = வேதங்கள் கூறுகின்ற  

உலகு எங்கும் விரிந்தன = உலகம் எல்லாம் பரவியது. எது பரவியது ?

உன் பாதங்கள் = உன் திருவடிகள்

இவை என்னின் படிவங்கள் எப்படியோ ? = அப்பேற்பட்ட திருவடிகள் இவை என்றால், உன் மற்ற படிவங்கள் எப்படியோ
ஓதம் கொள் கடல் அன்றி = குளிர்ந்த கடல் மட்டும்அல்ல

ஒன்றினோடு ஒன்று ஒவ்வாப் = ஒன்றோடு ஒன்று பொருந்தாத
பூதங்கள்தொறும் உறைந்தால் = பஞ்ச பூதங்களில் அவை சென்று இருந்தால்

அவை உன்னைப் பொறுக்குமோ? = அவற்றால் உன்னை 

ஏற்று இருத்திக்க் கொள்ள முடியுமோ ? முடியாது என்பது பொருள்.

அனைத்து பொருளுக்கும் அப்பாற்பட்டவன் இறைவன். 

இதில் இருப்பானா, அதில் இருப்பானா என்று தேடி கண்டு அடைய முடியாது.


அனைத்து உலகத்தையும் தன் ஒரு திருவடியில் அளந்தவன் அவன்.

உலகளந்த பெருமாள். 

நமக்கு தெரிந்தது எல்லாம் அந்த பாதத்தின் அடி மட்டும் தான். 

மீதியை யார் பார்த்தார்.

திருவெம்பாவையில், மாணிக்க வாசகர் சொல்லுவார்

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி ஆடேலோர் எம்பாவாய்!


No comments:

Post a Comment