Pages

Friday, April 13, 2012

புறநானூறு - காதலும் வீரமும்




கணவனோ காதலனோ போரில் அடிபட்டு கிடக்கிறான்.

அவனை தேடி அந்தப் பெண் போகிறாள்.

நேரமோ இரவு நேரம்

அவன் அடிபட்டு கிடப்பதை பார்க்கிறாள்.

இறக்கவில்லை. ஆனால் அவனால் எழுந்து நடக்க முடியாது.

அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு துக்கம் பொங்கி பொங்கி வருகிறது. வாய் விட்டு அழ வேண்டும் போல இருக்கிறது. அழுதால் அந்த சத்தம் கேட்டு பக்கத்து காட்டில் இருந்து புலி ஏதும் வந்து விடுமோ
 என்று பயப் படுகிறாள். அவனிடம் சொல்கிறாள் "உன்னை தூக்கி செல்லலாம் என்றாள் நீயோ கனமான ஆளாய் இருக்கிறாய். என்னால் உன்னை தூக்க முடியாது. என் வளையல் அணிந்த கையை பிடித்துக் கொள், மெல்ல நடந்து அந்த மலை அடிவாரம் போய் விடலாம்" என்கிறாள்.

  காதலும் வீரமும் ததும்பும் அந்தப் பாடல்




  ’ஐயோ!எனின்யான் புலிஅஞ் சுவலே;
  அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கவல்லேன்;
  என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
  இன்னாது உற்ற அறனில் கூற்றே;
  நிரைவளை முன்கை பற்றி
  வரைநிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே

  (புற நானுறு 255 பாடல் )

ஐயோ!எனின்யான் புலிஅஞ் சுவலே = நான் ஐயோ என்று கத்தினாள் புலி வந்து விடுமோ என்று பயமாய் இருக்கிறது ;

அணைத்தனன் கொளினே = உன்னை அனைத்து தூக்கி கொண்டு போகலாம் என்றாலோ

அகன்மார்பு எடுக்கவல்லேன் = உன்னுடைய அகன்ற மார்பை என்னால் எடுக்க முடியாது

என்போல் = என்னைப் போல

பெருவிதிர்ப்பு = பெரிய அதிர்ச்சி

உறுக = அடையட்டும்

நின்னை = உன்னை

இன்னாது = இந்த மாதிரி கஷ்டத்துக்கு

உற்ற = உள்ளாக்கிய

அறனில் = அறம் இல்லாத

கூற்றே = அந்த கூற்றுவனே

நிரைவளை = நிறைந்த வளையல்களை உடைய என்

முன்கை பற்றி = கையை பற்றிக் கொள்

வரை = மலை

நிழல் = அடிவாரம்

சேர்கம் = சேர்வோம்

நடந்திசின் சிறிதே = நடந்து, கொஞ்ச கொஞ்சமாக

3 comments:

  1. Wow, great song. When was this written?

    It is incredible that songs with such emotions and concepts were written so many (how many?) thousand years ago.

    ReplyDelete
  2. முதலில் நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க. அண்மையில் உங்கள் பதிவுகளைப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். மிகவும் அருமை. எனது தமிழ்ப் பசிக்கு உங்கள் எழுத்து அறுசுவை உணவாக அமைகிறது.

    ஒரு பதிவில் பார்த்தேன். ஐந்து பேர் வாசித்தால் தொடர்ந்து எழுதுவீர்கள் என்று. நிச்சயமாக ஐந்தை விடக் கூடிய பேர்களே வாசிப்பார்கள் என்று நம்புகிறேன். என்னையும் அதில் ஒருவராக நிச்சயமாக எண்ணிக் கொள்ளலாம்.

    புற நானூற்றில் இந்தப் பாடல் அருமையானது. இதைப் படிக்கும் போது அண்மையில் கேட்ட ஒரு விடையம் ஞாபகம் வந்தது. கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆறுமுகம் என்பவர் இந்தப் பாடலைப் பற்றிப் பேசியிருந்தார். அந்தத் தொகுப்பை நீங்கள் இங்கே பார்க்கலாம். அறம் புறம் பற்றி அருமையான நிகழ்வு.
    http://www.youtube.com/watch?v=K4fp5bXsvyU

    அவரின் விளக்கத்தின் படி கணவன் உயிருடன் இல்லை. இறந்து விட்டான். "நின்னை இன்னாது உற்ற அறனில் கூற்றே"

    கூற்றுவன் செய்கின்ற கொடுமை கொல்லுவது. அந்தக் கொடுமையை அவன் செய்து விட்டான். அவன் உடலைத் தூக்கிக் கொண்டும் அவளால் செல்ல முடியவில்லை. கானகத்துப் புலிகளுக்கு இரையாகவும் விட்டுப் போக மனமில்லாமல் அவள் கணவனின் உடலைக் கொஞ்சத் தூரம் தன்னோடு நடந்து வரும்படி கேட்கிறாள். என்ன கொடுமை.......

    காலத்தின் வாழ்வியலைக் காடும் படியாக அமைந்திருக்கிறது.

    மீண்டும் உங்கள் எழுத்துகளுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுக.

    ReplyDelete