Pages

Sunday, April 15, 2012

கம்ப இராமாயணம் - கைகேயி வரமும் தசரதன் புலம்பலும்


கம்ப இராமாயணம் - கைகேயி வரமும் தசரதன் புலம்பலும் 


தசரதனின் கடைசி காலம் புலம்பலில் முடிகிறது. முதலில் கைகேயிடம் புலம்புகிறான். பின், இராமனை காட்டுக்கு அனுப்பிவிட்டு அவனை நினைத்து புலம்புகிறான். 

கைகேயிடம் கெஞ்சுகிறான். 

இராமன் மேல் கொண்ட பாசம் ஒருபுறம், இராசநீதி தவறி விடக் கூடாதே என்ற ஆதங்கம் மறுபுறம், கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலை இன்னொரு புறம்...

தசரதன் தவிக்கிறான்....அந்த தவிப்பை கம்பன் இங்கே படம் பிடிக்கிறான் 


கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன்
என் உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ?பெண்ணே! வண்மைக் கைகேயன் மானே! பெறுவாயேல்மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற”

மண்ணே கொள் = இந்த இராஜியத்தை எடுத்து கொள்

கைகேயி இரண்டு வரங்களை கேட்டு விட்டாள். ஒன்று பரதன் நாடாள , மற்றது இராமன் காடாள.

என் கண்ணை வேண்டுமானாலும் தருகிறேன், என் உயிரை வேண்டுமானாலும் தருகிறேன், முதல் வரத்தை பெற்றுக் கொள், இரண்டாவது வரத்தை மற என்று கெஞ்சுகிறான்.

கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன் = என் கண்கள் வேண்டும் என்றாலும் \நான் தருகிறேன்

என் உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ? = என் உயிர் வேண்டுமா, அது உனது, எடுத்துக் கொள்
பெண்ணே! = நீ பெண் அல்லவா (கொஞ்சம் பெண்மையின் இரக்கம் இருக்காதா என்று சொல்லிப் பார்க்கிறான் )

வண்மைக் கைகேயன் மானே! = ஹுஹும் ... அவள் அசைந்த பாடு இல்லை...கைகேயேன் குலத்து பிறந்த மானே

பெறுவாயேல் = வேண்டும் என்றால்


நீ மற்றையது ஒன்றும் மற = அந்த இன்னொரு வரத்தை மறந்து விடு (கேட்காதே என்று சொல்லவில்லை, மற என்கிறான் )


1 comment:

  1. This poem melts one's heart, imagining Dasarathan begging Kaikeyi like this.

    ReplyDelete