தேவாரம் - ஒரு முன்னோட்டம்
தேவாரம் எழுதியது யார் என்று கேட்டால் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மற்றும் மாணிக்க வாசகர் என்று பொதுவாக எல்லோரும் சொல்லுவார்கள்.
அது பிழை.
திரு நாவுக்கரசர் பாடியது மட்டும் தான் தேவாரம்.
சைவ சிந்தாந்தத்தில் திரு முறைகள் பன்னிரண்டு.
1 -2- 3 - திரு முறைகள் திரு ஞான சம்பந்தர் பாடியது. அதற்க்கு திருக் கடை காப்பு என்று பெயர்.
3,- 4,- 5 - திரு முறைகள் திரு நாவுக்கரசர் பாடியது - தேவாரம் என்று பெயர்
தே + ஆரம் = தேவாரம் = இறைவனுக்கு மாலை. சாதாரண பூ மாலை காலையில் போட்டால் மாலைக்குள் வாடிவிடும். நாவுக்கரசர் பாடிய தேவாரம் 1400 ஆண்டுகள் (இவர் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர். நாம் இருப்பது 21 ஆம் நூற்றாண்டு. 14 நூற்றாண்டுகள் இடையில்) கழித்தும் வாடாமல் இன்றும் மணம் வீசிக் கொண்டு இருக்கிறது.
இவர் சைவ சமயத்தில் பிறந்து, சமண மதத்திற்கு சென்று, பின் மீண்டும் சைவ சமயத்திற்கு வந்தவர்.
இவர் பாடல்கள் மிகுந்த ஆழமும், அழகும் கொண்டவை.
அந்த தேவரத்தில் இருந்து சில பாடல்கள்.....
மீண்டும் ஒரு பிறவி எடுக்க யாருக்காவது ஆசை இருக்குமா ?
'பிறவி துயர் கெட' என்பார் மணி வாசகர்.
'பிறவி பெருங்கடல்' என்பார் வள்ளுவர்.
'இன்னும் பிறக்க ஆசை கொண்டனையோ" என்று கேட்கிறார் பட்டினத்தடிகள்.
எல்லோரும் பிறவா வரம் தான் வேண்டுவார்கள். நாவுக்கரசர் மட்டும், இந்த மனித பிறவியும் வேண்டும் என்கிறார்.
எதற்கு ?
குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற்
குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்
பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும்
காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த
மாநிலத்தே.
குனித்த புருவமும் = வளைந்த புருவமும்
(ஏன் வளைந்தது ? அடியவர்கள் கூறுவதை கூர்ந்து கேட்டதால்
)
கொவ்வைச்செவ் வாயிற் = கோவைப் பழம்
போல் சிவந்த அந்த உதட்டில்
குமிண்சிரிப்பும் = நீர்க் குமிழி போல்
தோன்றும் சிரிப்பும்
பனித்த சடையும் = கங்கையை சூடியதால்
ஈரமான, பனி படர்ந்த சடையும்
பவளம்போல் மேனியிற் = பவளம் சிவந்த
நிறம் உடையது. அப்படி சிவந்த மேனியில்
பால்வெண்ணீறும் = பால் போன்ற திரு நீரும்
இனித்த முடைய = இனிமை உடைய
எடுத்தபொற் பாதமும் = எடுத்த பொற்
பாதமும்
காணப்பெற்றால் = கண்டால்
மனித்தப் பிறவியும் = இந்த மனிதப்
பிறவியும்
வேண்டுவ தே = வேண்டுவதே
இந்த மாநிலத்தே. = இந்த பெரிய உலகில்
இறைவனின் திரு உருவத்தை பார்த்து பார்த்து ரசிக்க முடிவதால், இந்த மனித பிறவியும் வேண்டுவதே என்கிறார்.
நான் பல முறை யோசித்து இருக்கிறேன். சிவனுக்கு இப்படிதான் உருவம் என்று முதன் முதலில் எழுதியது யார் தெரியுமா? இந்த மாதிரி உருவ சித்தரிப்பு ஒரு "group think" (சேர்ந்து யோசிப்பது) என்றால் சரியாகுமா? இல்லை இவர்கள் எல்லோரும் சிவன் விஷ்ணு வினாயகர் போன்ற கடவுள்களைக் கண்டுதான் இப்படிப் பாடல் எழுதி இருக்கிறார்களா?
ReplyDeleteGood question. The drawings were mostly made by Raja Ravi Varma. But the idols were in existence much before Raja Ravi Varma. How those idols were made ? May be first the folk lores gave some description and later it got converted to idols.
Delete1. What is the earliest instance you know of a specific form being given to Siva, Vishnu, etc, in Tamil literature? Did such descriptions exist in Sanskrit lit already?
Delete2. My problem is - How did all these guys describe gods in the same form? Why not describe them as a "bearded, 30-feet tall guy"? There are only two possible answers: (a) they saw the gods for themselves, or (b) they just followed each other and that was enough for their purposes. Which one do you believe?
I do not know. About 1000 years before, there was no media, no communication net work. It is unlikely each person read the other person's works and then adopted it.
DeleteHave they seen themselves ? Hard to believe either.
Interesting problem to solve....
Obviously temples existed at that time, providing a fixed image for each god. Stories would have traveled by word of mouth. And so it all begins until everyone uses the same image.
DeleteI am not saying all these poets were fools. It is just that their purpose of introspection was served sufficiently by using the same images.
Also, if our major gnani/sadhus "saw" the different forms of god, then why did they not see other gods such as Apollo or Zeus? Why should we believe that Siva and Vishnu are real, but Zeus and Apollo are not real?!
DeleteThat's why I am tempted to say that all these poets, etc. used specific forms as only aids to introspection, meditation, deeper understanding of self, etc.
I was all along thinking that this song is Manickavasaga's. Thx a lot.
ReplyDeleteநல்லதொரு மொழி தமிழிருக்க ஆங்கிலம் நாடும் நாடோடியாய்......
ReplyDeleteவாழும் இவ் அவலம் , பாம்பிரு பொந்தில் எலியாய் பிறந்த உயிர்க்கும் வேண்டாம்......