திருவாசகம் - விக்கினேன் வினையேன்
கிடைப்பது எல்லாமா அனுபவிக்க முடிகிறது?
சில சமயம் கிடைத்ததின் அருமை தெரியாமல் போய்விடுகிறது.
சில சமயம் கிடைத்ததை அனுபவிக்க நேரம் இல்லாமல் போய் விடுகிறது.
உடல் உபாதை சில சமயம் நம்மை அனுபவிக்க விடாது.
இந்த பிரச்சனை நமக்கு மட்டுமல்ல, மாணிக்க வாசகருக்கும் இருந்திருக்கிறது.
இறைவன் அவருக்கு அமுதத்தை வழங்கினார். ஆஹா அமுதம் கிடைத்து விட்டது என்று அள்ளி அள்ளி விழுங்கினார். அது போய் தொண்டையில் அடைத்து கொண்டது. விக்கல் வந்தது. என்ன செய்ய ? இப்ப அமுதத்தை பருக முடியாது.
அப்பவும் இறைவனே அவர் மேல் இரக்கப் பட்டு, அந்த விக்கல் போக இனிய தண்ணீர் தந்ததாய் அவரே சொல்கிறார் இந்தப் பாடலில்...
--------------------------------------------------------------------------------------------------------------------
வழங்குகின்றாய்க்கு உன் அருளார்
அமுதத்தை வாரிக் கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன்
என் விதியின்மையால்
தழங்கு அரும்தேன் அன்ன தண்ணீர் பருகத்
தந்து உய்யக் கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன்உன்
அடைக்கலமே
------------------------------------------------------------------------------------------------------------------------
வழங்குகின்றாய்க்கு = நீ வழங்குகின்றாய்
உன் அருளார் அமுதத்தை = உன் அருளாகிய அமுதத்தை
வாரிக் கொண்டு விழுங்குகின்றேன் = அதை வாரி விழுங்கினேன்
விக்கினேன் வினையேன் = விக்கினேன், என் பழ வினையால்
என் விதியின்மையால் = எனக்கு நல்ல விதி இன்மையால்
தழங்கு = ஒலி தரும்
அரும்தேன் அன்ன தண்ணீர் = இனிய, தேன் போன்ற தண்ணீரை
பருகத் தந்து உய்யக் கொள்ளாய் = பருகத்தந்து என்னை காப்பாற்றினாய்
அழுங்குகின்றேன் = அழுந்துகின்றேன்
உடையாய் = உடையாய்
அடியேன்உன் அடைக்கலமே = அடியேன் உன் அடைக்கலமே
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
"விக்கினேன் வினெயேன்" என்ற வரி கேட்டு இருக்கிறேன். இப்போது முழுப் பாடலையும் படித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி.
ReplyDeleteஅவன் அருளாலே அவன் தாள் வணங்கி-
ReplyDeleteசிறிய வரி பெரிய உண்மை. Thx a lot.
நன்றி மிக்க நன்றி
ReplyDelete