Pages

Wednesday, April 4, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருப் பேரூர்

இறைவனை பக்தியால் கட்டிப் போட முடியும் என்று பலப் பல பாடல்களில் நம்
பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.


--------------------------------------------------------------------------------------------
பேரே யுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும்
ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே
-------------------------------------------------------------------------------------------------


சீர் பிரித்தபின்


-------------------------------------------------------------------------------------------------
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரென் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகும் உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே

-----------------------------------------------------------------------------------------------------


பொருள்:


பேரே = திருப் பேரூர் என்ற ஊரில்

உறைகின்ற பிரான் = இருக்கின்ற பிரான்

இன்று வந்து = இன்று வந்து

பேரென் என்று = பெயர்ந்து போக மாட்டேன் என்று (என் கிட்ட ஒரு சல்லி பேராது
என்று சொல்லக் கேள்வி பட்டு இருக்கீர்களா)

நெஞ்சு நிறையப் புகுந்தான் = என் மனத்தில் நிறைய புகுந்தான்

கார் ஏழ் = ஏழு மேகங்கள்

கடல் ஏழ் = ஏழு கடலும்

மலை ஏழ் = ஏழு மலைகளையும்

உலகும் = இந்த உலகை எல்லாம்

உண்டும் = உண்டும் , சாப்பிட்ட பின்னும்

ஆரா வயிற்றானை = பசி ஆறாத வயிற்றானை

அடங்கப் பிடித்தேனே = வேறு எங்கும் போகாதபடி அடங்கும் படி பிடித்தேனே

2 comments:

  1. Greetings for the day.
    Thank you very much for having given me the great opportunity to read the wonderful Tamil poems which once upon a time was my daily routine.
    அதுவும் இந்த மாதிரி ஒருவர் பதம் பிரித்து எழுதினால் படிப்பதற்கு தான் எவ்வளவு சுகம் .
    My children enjoy this very much. Any new article from RS uncle today? is a regular question from my children during dinner time as we all love literature a lot.
    ஒரு நேயர் விருப்பம் :- திருமூலர் எழுதிய அன்பே சிவம் என்ற பாடல் நான் சிறு வயதில் படித்தது. If possible please post it.

    ReplyDelete
    Replies
    1. Thank you for your feedback. Definitely I will write on Thiru Moolar's Thiru Mandhiram.

      Delete