Pages

Saturday, April 14, 2012

சித்தர் பாடல்கள் - பட்டினத்தார் - உடம்பின் மறு கோணம்

சித்தர் பாடல்கள் - பட்டினத்தார் - உடம்பின் மறு கோணம் 


மரண பயத்திற்கு முதல் காரணம் உடம்பின் மேல் உள்ள பற்று. மரண பயம் நீங்க வேண்டும் என்றால் உடல் பற்று நீங்க வேண்டும். இந்த உடல் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.  பட்டினத்தார் இந்த உடலின் மேல் உள்ள கவனத்தை குறைக்க பல பாடல்கள் பாடி உள்ளார்...அதில் ஒன்று ....




-----------------------------------------------------------------------------------------------
ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே - வன்கழுக்கள்
தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக் குத்தித் தின்னக் கண்டு.
--------------------------------------------------------------------------------------------

சீர் பிரிக்காமல் புரிவது கொஞ்சம் கஷ்டம் குறிப்பாக கடைசி இரண்டு வரிகள் 

--------------------------------------------------------------------------------------------
ஒன்பது வாய் தோல் பைக்கு ஒரு நாளைப் போலவே 
அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாயே - வன் கழுக்கள்
தத்தி தத்தி சட்டை தட்டி கட்டி பிட்டுக் 
கத்திக் குத்தி தின்னக் கண்டு 
------------------------------------------------------------------------------------------------


ஒன்பது வாய் = ஒன்பது வாசல் கொண்ட 
தோல் பைக்கு = தோலால் போர்த்தப்பட்ட இந்த உடலின் மேல் 
ஒரு நாளைப் போலவே = ஒரு நாளைப் போலவே எல்லா நாளும் 
அன்பு வைத்து = அன்பு வைத்து 
நெஞ்சே அலைந்தாயே = அலைந்தாயே என் மனமே
வன் கழுக்கள் = வன்மையான கழுகுகள் 
தத்தி தத்தி = தத்தி தத்தி கிட்ட வந்து
சட்டை தட்டி = சட்டை போன்ற தங்களின் இறகுகளை தட்டி சப்தம் செய்து
கட்டி பிட்டுக் = ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்து சண்டையிட்டு 
கத்திக் = கத்தி, சப்தம் இட்டுக்கொண்டு 
குத்தி = இறந்த உடலை தன் கூறிய அலகால் குத்தி கிழித்து 
தின்னக் கண்டு = தின்ன கண்டும்


3 comments:

  1. What did the sithar say as the right thing to focus on, if not one's body?

    ReplyDelete
    Replies
    1. Every attachment brings a new problem. Is it not ?

      Delete
  2. The body is the basic reason to have Ego. If you want to cut ego then you should not have attachment towards this physical body. This physical body is not permanent , everyday number of cells are dying ,so no need to have importance .

    ReplyDelete